தினசரி 4 மணித்தியாலங்கள் மின்வெட்டு..! தியாகங்களை செய்ய தயாராகவேண்டும் என்கிறார் எரிசக்தி அமைச்சர்.. |

இலங்கையில் நாளொன்றுக்கு 4 மணித்தியாலங்கள் மின்வெட்டு ஆமுலாகலாம் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில கூறியுள்ளார். 

சில மாதங்களுக்குள் அமெரிக்க டொலர் கடனைப் பெற இலங்கை தவறினால், சுமார் 04 மணித்தியாலங்கள் மின்வெட்டுக்கு வாய்ப்புள்ளதாக அவர் எச்சரித்துள்ளார்.

இந்த விடயத்தில் தேவையான தியாகங்களை செய்வதற்கு நாடு தயாராக இருக்க வேண்டும் எனவும்,

அரசியல்வாதிகள் முன்னுதாரணமாக தியாகங்களைச் செய்து வழிவகுக்க வேண்டுமெனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

குறைந்த பட்சம் ஏப்ரல் மாதம் பருவமழை தொடங்கும் வரையில் தற்போதுள்ள வரையறுக்கப்பட்ட வெளிநாட்டு கையிருப்பில் எரிபொருளை இறக்குமதி செய்ய வேண்டியிருக்கும்.

மழைக்காலம் வரை நாட்டில் எரிபொருளை பயன்படுத்தியே மின்சாரம் உற்பத்தி செய்ய வேண்டும். 24 மணி நேரமும்  தடையின்றி மின்சாரம் வழங்குவதற்கான இந்த முயற்சியின் அடிப்படையில், பெரிய கடனைப் பெறாவிட்டால் மார்ச் மாதத்திற்குள் சுமார் 04 மணி நேர தினசரி மின்வெட்டை அமுல்படுத்த வேண்டும்.

நான்கு மணி நேர மின்வெட்டுக்கு செல்வதை விட, இப்போதிருந்தே ஒன்றரை மணி நேர வெட்டுகளை அமல்படுத்துவது நல்லது அல்லவா?

இரண்டு நாட்கள் நட்சத்திர ஹோட்டல்களில் அடைத்து வைத்துவிட்டு 28 நாட்கள் பட்டினி கிடக்க வேண்டுமா?

அல்லது தினமும் மூன்று வேளையும் சாப்பிட காய்கறிகள் மற்றும் பழங்களை வாங்கி வீட்டிலேயே உணவை சமைக்க வேண்டுமா?” என அமைச்சர் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews