கனடாவில் தேடப்படும் தமிழ் யுவதி!! -மக்களிடம் உதவி நாடியுள்ள பொலிஸார்- |

கனடாவில் வசித்து வந்த நிலையில் காணாமல் போன தமிழ் யுவதி ஒருவரை கண்டுபிடிப்பதற்கு டொராண்டோ பொலிஸார் அங்குள்ள பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

28 வயதான பிரசாந்தி அர்ச்சுனன் என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த யுவதியை இறுதியாக கடந்த 16 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையே சிலர் கண்டுள்ளனர். இதன் பின் அவருடைய தொடர்பு கிடைக்கவில்லை.

இவ்விடயம் தொடர்பில் பொலிஸார் விடுத்துள்ள அறிக்கையில், காணாமல் போன யுவதி நடுத்தர உடல், பழுப்பு நிற கண்கள், கருப்பு நேரான முடி மற்றும் நடுத்தர நிறம் என விவரிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், யுவதியின் பாதுகாப்பு குறித்து அக்கறை கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யுவதி குறித்த தகவல் தெரிந்தவர்கள் பின்வரும் முறையில் அறிவிக்க முடியும் என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews