வவுனியாவில் விபத்து: மதகுரு படுகாயம்!

வவுனியா குட்செட்வீதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் மதகுரு ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வவுனியாவில் இருந்து குட்செட்வீதி நோக்கி வந்த மோட்டார் சைக்கிளும், குட்செட் பகுதியில் இருந்து நகர் நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியும் குட்செட்வீதியில் அமைந்துள்ள கருமாரியம்மன் ஆலயத்தின்... Read more »

தொண்டைமானாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால் மாணவர்களுக்கு உதவி!

யாழ்ப்பாணம், தொண்டைமானாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால், மாணவர்கள் இருவருக்கு கல்விச் செயற்றிட்ட உதவியாக துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டுள்ளன. சந்நிதியான் ஆச்சிரம மோகனதாஸ் சுவாமிகள் அவர்களால் உடுவில் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட குப்பிளான் தெற்கு பிரதேசத்தை சேர்ந்த யா-ஏழாலை சிறிமுருகன் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் தரம் –... Read more »

குழப்பங்களுக்கு மத்தியில் நிறைவேறிய பாதீடு!

மன்னார் – நானாட்டான் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் இன்றைய தினம், தலைவர் உட்பட 8 உறுப்பினர்களின் வாக்குகளினால் குழப்பங்களுக்கு மத்தியில் நிறைவேறியுள்ளது. நானாட்டான் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட சபை அமர்வு... Read more »

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

இந்தோனேசியாவின் தெற்குப் பகுதியில் உள்ள புளோரஸ் கடல் பகுதியில் 7.3 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதனால் அதன் அருகிலுள்ள கடற்கரையோரங்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்தோனேசிய நேரப்படி இன்று காலை 11:20 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. திமோர்-லெஸ்டேக்கு மேற்கே... Read more »

ஒரு தகுதி வாய்ந்த முதல்வரை இழக்க இடமளிக்கக்கூடாது!யாழ் மாநகர சபை பாதீடு தொடர்பில் சி வி விக்னேஸ்வரன்.

நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்கள் விடுத்திருக்கும் அறிக்கை வரவு செலவுத் திட்டத்தை தோற்கடிப்பதால் நகரபிதா வி.மணிவண்ணனை வெளியேற்றலாம் என்ற எண்ணத்தில் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவதை நான் அறிவேன், மக்கள் பிரதிநிதிகள் தங்கள் சொந்த நலன்களுக்கு, விருப்பு வெறுப்புகளுக்கு முதலிடம் கொடுப்பதால்த் தான் இவ்வாறான சிந்தனைகள் மேலோங்குகின்றன.... Read more »

கிளிநொச்சி பகுதியில் தனியார் காணியில் துப்பாக்கி ரவைகள் மீட்பு…!

கிளிநொச்சிக்கு கோரக்கண் கட்டுப்பகுதியில் உள்ள தனியார் காணியொன்றில் இருந்து துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன  கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கோரக்கன் கட்டு பூங்காவனம் சந்திப்பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில்  குழி ஒன்றை வெட்டிய போது சில  துப்பாக்கி ரவைகள் அடையாளம் காணப்பட்டதை... Read more »

அச்சுவேலி – பத்தைமேனி பகுதியில் விபத்து! இளைஞர்கள் இருவர் காயம்.. |

யாழ்.அச்சுவேலி – பத்தைமேனி சந்தியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் காயமடைந்த நிலையில் அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இரு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் காயமடைந்துள்ளனர். சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். Read more »

பூஸ்டர் தடுப்பூசி செலுத்திவிட்டு வீடு திரும்பிய முதியவர் மரணம்! உடற்கூற்று பரிசோதனை, மற்றும் பீ.சி.ஆர் பரிசோதனைக்கு நடவடிக்கை.. |

பூஸ்டர் தடுப்பூசி செலுத்திவிட்டு வீடு திரும்பிய நபர் உயிரிழந்துள்ள நிலையில் உடற்கூற்று பரிசோதனை இடம்பெறவுள்ளதாகவும், அதன் பின்பே மரணத்திற்கான காரணம் தொடர்பான தகவல்கள் வெளியிடப்படும். எனவும் பொலிஸார் கூறினர். வவுனியா – மகாறம்பைகுளம் பொதுநோக்கு மண்டபத்தில் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக் கொண்ட குறித்த நபர் சுகாதாரப்... Read more »

யாழில் 3 பிள்ளைகளின் தாய் கொரோனா தொற்றால் மரணம்!

யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் 3 பிள்ளைகளின் தாய் உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கினறன. யாழ்ப்பாணம் – அராலி வீதி வசந்தபுரத்தை சேர்ந்த க.பத்மலோஜினி (வயது 38) என்ற 3 பிள்ளைகளின் தாயாரே கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார். 6 நாள்களாக காய்ச்சல் இருந்துள்ள நிலையில்... Read more »

சீனா துாதுவர் வடக்கிற்கு விஜயம்! பல்வேறு உயர்மட்டங்களுடன் சந்திப்பு, காரணம் என்ன?

இலங்கைக்கான சீனா நாட்டின் துாதுவர் கீ சென்ஹொங் (Kei Senhong) வடமாகாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக கொழும்பு ஊடகங்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளது.  இந்த விஜயத்தின் போது அவர் எதிர்வரும் புதன் மற்றும் வியாழக்கிழமை ஆகிய இருநாள்கள் தங்கியிருப்பார் என சீன தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது. இதன்போது  ஆளுநர்... Read more »