பூஸ்டர் தடுப்பூசி செலுத்திவிட்டு வீடு திரும்பிய முதியவர் மரணம்! உடற்கூற்று பரிசோதனை, மற்றும் பீ.சி.ஆர் பரிசோதனைக்கு நடவடிக்கை.. |

பூஸ்டர் தடுப்பூசி செலுத்திவிட்டு வீடு திரும்பிய நபர் உயிரிழந்துள்ள நிலையில் உடற்கூற்று பரிசோதனை இடம்பெறவுள்ளதாகவும், அதன் பின்பே மரணத்திற்கான காரணம் தொடர்பான தகவல்கள் வெளியிடப்படும். எனவும் பொலிஸார் கூறினர்.

வவுனியா – மகாறம்பைகுளம் பொதுநோக்கு மண்டபத்தில் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக் கொண்ட குறித்த நபர் சுகாதாரப் பிரிவினரின் அறிவுறுத்தலுக்கு அமைய தடுப்பூசி ஏற்றிய பின் சிறிது நேரம் அவ்விடத்தில் அமர்ந்து இருந்து விட்டு 

துவிச்சக்கர வண்டியில் வீடு நோக்கி சென்றுள்ளார். வீடு சென்று சில மணி நேரத்தில் திடீரென குறித்த நபர் மரணமடைந்துள்ளார். இதனையடுத்து அவரது சடலம் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

அவர் ஏற்கனவே சில நோய்களுக்கு உட்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. வவுனியா, காத்தார் சின்னக்குளம் பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு மரணமடைந்தவராவார்.

அவரது சடலத்திற்கு தற்போது பிசீஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், மரணத்திற்கான காரணம் குறித்து அறிந்து கொள்ள அவரது சடலத்தை உடனடியாக உடற்கூற்று பரிசோதனை மேற்கொள்ளவும்

நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்

Recommended For You

About the Author: Editor Elukainews