யாழில் 3 பிள்ளைகளின் தாய் கொரோனா தொற்றால் மரணம்!

யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் 3 பிள்ளைகளின் தாய் உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கினறன.

யாழ்ப்பாணம் – அராலி வீதி வசந்தபுரத்தை சேர்ந்த க.பத்மலோஜினி (வயது 38) என்ற 3 பிள்ளைகளின் தாயாரே கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்.

6 நாள்களாக காய்ச்சல் இருந்துள்ள நிலையில் தனியார் வைத்தியசாலையில் பெற்ற மருந்துகளை பயன்படுத்திவந்துள்ளார்.

இந்நிலையில் திடீர் மூச்சு திணறல் ஏற்பட்டிருந்த நிலையில் நேற்றுமுன்தினம் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். இறப்பின் பின்னர் அவருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியானது.

மேலும் குறித்த பெண் கொவிட்-19 தடுப்பூசியை முழுமையாக பெற்றுக்கொள்ளவில்லை. என தொியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் யாழ்.போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை முன்னெடுத்தார்.

சடலம் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளின் அடிப்படையில் தகன செய்யப்படவுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews