விசுவமடுவில் எரிபொருளுக்காக குவிந்த மக்கள்……!

இரண்டு நாட்களின் பின்னர்  இன்றைய தினம் விசுவமடு எரிபொருள் நிரப்பு நிலையத்தில்  எரிபொருள் விநியோகம் இடம் பெற்றது. எரிபொருள் தட்டுப்பாடு அல்லது விலை அதிகரிக்கும் எனும்  அச்சத்தில்   மக்கள்   பெருமளவாக  மக்கள் குவிந்து காணப்பட்டனர்.இதனால் அங்கு அதிகளவிலான மக்கள் கூட்டம் காணப்பட்டதுடன்  எரிபொருள் கொள்வனவு... Read more »

மலையக மக்களுக்கு சந்நிதியான் ஆச்சிரமத்தால் 350000 ரூபா அத்தியவசியமான உணவுப் பொருள்கள் வழங்கல்…….!

ஊவா மாகாணத்தில் உள்ள பண்டாரவளையில்  அமைந்துள்ள  கிரேக்கத் தோட்டத்திலுள்ள  நாளாந்தம் கூலி வேலை செய்யும் 125 குடும்பங்களுக்கு ரூபா 350000  பெறுமதியான அத்தியவசியமான உலர் உணவுப்பொருட்கள் இன்றைய தினம் சன்நிதியான் ஆச்சிரமத்தால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இவ் உலர் உணவு வழங்கும் நிகழ்வானது  கிரேக்கத் தோட்டத்தில்... Read more »

மாவிட்டபுரத்தில் ரயிலுடன் மோதி ஒருவர் உயிரிழப்பு !

இன்று (26) மதியம் மாவிட்டபுரத்தில் உள்ள பாதுகாப்பற்ற புகையிரதக் கடவையில் ரயிலுடன் மோதி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் பாதுகாப்பற்ற புகையிரதக் கடவையை கடந்து வீதியால் பயணிக்க முற்பட்டவேளையே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் சாந்தை – பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த சதாசிவம் சசிக்குமார்... Read more »

சிறப்பாக இடம் பெற்ற மகாஜனா கல்லூரியின் பரிசளிப்பு விழா…..!

மகாஜனக் கல்லூரி முன்னாள் கணிதபாட ஆசிரியை அமரர் சௌபாக்கியவதி இராஜரட்ணம் நினைவாக வடமாகாண ரீதியாக தரம் 8 மாணவர்களுக்கு நடாத்தப்பட்ட மகாஜனன் கணித, விஞ்ஞான போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா இன்று இணுவில் அக்‌ஷய மஹால் மண்டபத்தில் நடைபெற்றது. பிரதம விருந்தினராக... Read more »

யாழில் வழமையான செயற்பாடுகளுக்கு மாத்திரம் எரிபொருள் விநியோகிக்குமாறு அரச அதிபர் பணிப்பு! –

யாழ்ப்பாண மாவட்டத்தில் வழமையான செயற்பாடுகளுக்கான எரிபொருளை மாத்திரம் விநியோகிக்குமாறு யாழ் மாவட்ட அரசாங்க அதிபர்க.மகேசன் யாழ் மாவட்ட பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினருக்கு அறிவுறுத்தி யுள்ளதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன யாழ் மாவட்டத்தில் எரிபொருள் பொது மக்களுக்கு வழமைபோன்று விநியோகிக்கப்பட்டு வருகின்றது. காங்கேசன்துறை எரிபொருள் களஞ்சியத்தில் தேவையான... Read more »

பருத்தித்துறை ஆதார வைத்திய சாலைக்கு மூன்று மாடி விடுதி கட்டிடம்  திறந்து வைப்பு …….!

பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையின் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 3 மாடி நோயாளர் விடுதி கட்டடத் திறப்பு விழா பருத்தித்துறை ஆதார வைத்திய சாலை பதில் பணிப்பாளர் வே.கமலநாதன் தலமையில் காலை 10:00 மணிக்கு இடம் பெற்றது. முதல் நிகழ்வாக பிரதம, சிறப்பு, கௌரவ,  விருந்தினர்கள்... Read more »

2500 கொள்கலன்கள் துறைமுகத்தில் தேக்கம்…..!

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய சுமார் 2,500 கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கியுள்ளதாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. டொலர் தட்டுப்பாடு காரணமாக அரிசி, பருப்பு, சீனி, உலர்ந்த மிளகாய் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கியுள்ளதாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள்... Read more »

சுமத்ரா தீவில் நிலநடுக்கம்: ஏழு பேர் பலி…..!

இந்தோனேஷியாவில் காலை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில், ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். காயம் அடைந்த 20 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆசிய நாடான இந்தோனேஷியாவின் மேற்கு பகுதியில் உள்ள சுமத்ரா தீவில், நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது.ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தால்,... Read more »

ரஷ்ய வான்வெளியில் பிரிட்டன் விமானங்கள் பறக்க தடை –

பிரிட்டன் விமானங்கள் ரஷ்ய விமான நிலையங்கள், வான்வெளிப் பகுதியில் பறக்க ரஷ்யா தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.உக்ரைன் உடன் ரஷ்யா தாக்குதலை தொடர்ந்து வரும் நிலையில், உக்ரைன் படைகள் திணறி வருகின்றன. பல நாடுகளிடம் ஆதரவு கரம் நீட்டிய உக்ரைன், தங்கள் நாட்டுடன் சேர்ந்து... Read more »

ஐரோப்பிய மக்களை யுக்ரேனுக்கு ஆதரவாகப் போராடுமாறு வலியுறுத்திய யுக்ரேன் அதிபர்……!

யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலன்ஸ்கி கியவில் தனது அலுவலகத்தில் இருந்து ராணுவ உடை அணிந்துகொண்டு பேசினார். அப்போது, ரஷ்யா முன்னேறும் வேகத்தைக் குறைக்க ஐரோப்பிய தலைவர்கள் போதுமான நடவடிக்கையை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினார். “டேங்கர்களின் நீண்ட வரிசை மற்றும் வான்வழித் தாக்குதல்கள், ஐரோப்பா... Read more »