ஐரோப்பிய மக்களை யுக்ரேனுக்கு ஆதரவாகப் போராடுமாறு வலியுறுத்திய யுக்ரேன் அதிபர்……!

யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலன்ஸ்கி கியவில் தனது அலுவலகத்தில் இருந்து ராணுவ உடை அணிந்துகொண்டு பேசினார்.

அப்போது, ரஷ்யா முன்னேறும் வேகத்தைக் குறைக்க ஐரோப்பிய தலைவர்கள் போதுமான நடவடிக்கையை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினார்.
“டேங்கர்களின் நீண்ட வரிசை மற்றும் வான்வழித் தாக்குதல்கள், ஐரோப்பா நீண்டகாலத்திற்கு முன்பு, இரண்டாம் உலக போரின் போது பார்த்ததைப் போலவே இருக்கின்றது.
அந்த நிலை ‘இனி ஒருபோதும் வரக்கூடாது’ என்று அப்போது ஐரோப்பா கூறியது,” என்று கூறியவர், ஆனால், மீண்டும் இப்போது 2022-ஆம் ஆண்டில் இரண்டாம் உலகப் போர் முடிந்து 75 ஆண்டுகள் கழித்து நடந்துகொண்டிருக்கிறது,” என்றார்.
இன்னும் நேரம் கடந்து விடவில்லை. ஐரோப்பிய தலைவர்கள் விரைந்து செயல்பட்டால், ரஷ்ய ஆக்கிரமிப்பை நிறுத்த முடியும் என்று கூறினார். அதோடு, ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள மக்களை போராட்டங்களை முன்னெடுத்து, அரசுக்கு இதுகுறித்த முடிவை எடுக்க அழுத்தம் கொடுக்குமாறு வலியுறுத்தினார்.

Recommended For You

About the Author: Editor Elukainews