மலையக மக்களுக்கு சந்நிதியான் ஆச்சிரமத்தால் 350000 ரூபா அத்தியவசியமான உணவுப் பொருள்கள் வழங்கல்…….!

ஊவா மாகாணத்தில் உள்ள பண்டாரவளையில்  அமைந்துள்ள  கிரேக்கத் தோட்டத்திலுள்ள  நாளாந்தம் கூலி வேலை செய்யும் 125 குடும்பங்களுக்கு ரூபா 350000  பெறுமதியான அத்தியவசியமான உலர் உணவுப்பொருட்கள் இன்றைய தினம் சன்நிதியான் ஆச்சிரமத்தால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இவ் உலர் உணவு வழங்கும் நிகழ்வானது  கிரேக்கத் தோட்டத்தில் அமைந்துள்ள ஶ்ரீ சக்தி அரங்கத்தில் இடம் பெற்றது.
இவ் உதவியை வடமராட்சி சால்வச் சந்நிதியான் ஆச்சிரமத்தின் இயக்குநர்  மோகனதாஸ் சுவாமிகள் நேரடியாக சென்று வழங்கி வைத்தார்.
இதில் குறித்த தோட்டத்தின் சேர்ந்த பலரும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தமை குறிப்பிட தக்கதது.

Recommended For You

About the Author: Editor Elukainews