பருத்தித்துறை ஆதார வைத்திய சாலைக்கு மூன்று மாடி விடுதி கட்டிடம்  திறந்து வைப்பு …….!

பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையின் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 3 மாடி நோயாளர் விடுதி கட்டடத் திறப்பு விழா பருத்தித்துறை ஆதார வைத்திய சாலை பதில் பணிப்பாளர் வே.கமலநாதன் தலமையில் காலை 10:00 மணிக்கு இடம் பெற்றது.
முதல் நிகழ்வாக பிரதம, சிறப்பு, கௌரவ,  விருந்தினர்கள் வீதியிலிருந்து திறப்பு விழா மண்டபம் வரை மலர்மாலை அணிவிக்கப்பட்டும், மங்கல் இசை வாத்தியத்துடன் அழைத்துவரப்பட்டு மங்கல விளக்குகள் ஏற்றப்பட்டதுடன் பிரதம விருந்தினர்களால் நோயாளர் விடுதியின் கல்வெட்டு திரை நீக்கம் செய்யப்பட்டு நோயாளர் விடுதி சம்புர்தாய பூர்வமாக திறந்து வைக்கப்பபட்டது.
இதில் பிரதம அதிதியாக டில்மா  சிலோன் தேயிலை நிறுவனத்தின் அறங்காவலரும், மற்றும் MJF  அறக்கட்டளை நிதிய பிரதம நிறைவேற்று அதிகாரியுமான Mr.dilhan c Fernando, மற்றும்  LAN and Barbara karan foundation நிறுவுனரும் முனனாள் ministry of economics and labour affairs, city of hambung செனரர் லான் கரன்,
சிறப்பு விருந்தினராக MJF அறக்கட்டளை நிதியம் அறங்காவலர் K.R.கடன், கௌரவ விருந்தினர்களாக வட மாகாண சபையின் பிரதம நிறைவேற்று செயலாளர் S.M. சமன் பண்டுளசேன, வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திருமதி S. மோகநாதன், வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன், பருத்தித்துறை ஆதார வைத்திய சாலை வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், தாதியர்கள், ஊழியர்கள் நலன்விரும்பிகள், நிதி கொடையாளர் நிறுவனங்களின் பிரதிநிதிகள் உட்பட்ட அதிதிகள் கலந்து கொண்டனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews