நம்பிக்கையில்லா பிரேரணையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஒப்பம்!

அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செ. கஜேந்திரன் ஆகியோர் கையொப்பமிட்டனர். கொழும்பில் உள்ள எதிர்கட்சி அலுவலகத்திற்கு நேற்று புதன்கிழமை சென்ற இரு பாராளுமன்ற உறுப்பினர்களும் தங்கள் கையொப்பங்களை இட்டனர். நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார... Read more »

உக்ரைன் போர்: கைகள் கட்டப்பட்ட நிலையில் சடலங்கள் மீட்பு!

உக்ரைனின் வடகிழக்கு பிராந்தியமான சுமியில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்று அறிய வருகின்றது. இதில் பல சடலங்கள் கைகள் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளன. அந்தப் பிராந்தியத்துக்கு பொறுப்பான தளபதி டிமிட்ரோ ஜிவிட்ஸ்கி கூறியுள்ளார். இவ்வாறு மீட்கப்பட்ட சடலங்களில் சித்திரவதைகளுக்கு உள்ளானமைக்கான அடையாளங்களும் தலையில்... Read more »

வடக்கு ஆசிரியர்களுக்கு சொந்த மாகாணத்தில் நியமனம் இல்லை!

கல்வியியல் கல்லூரிகளை முடித்த வட மாகாண ஆசிரியர்களுக்கு சொந்த மாகாணத்தில் நியமனம் இல்லை என்ற நிலைப்பாடு திட்டமிட்ட பழிவாங்கும் செயல்பாடு. இதனை வன்மையாகக் கண்டிப்பதோடு இப்போதுள்ள சூழ்நிலையில் அவர்கள் வாழ்க்கைக்காக போராடும் நிலையில் இதனை ஏற்க முடியாது என்று இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம்... Read more »

யாழ்ப்பாணத்தில் எரிவாயு அடுப்பு வெடிப்பு!

யாழ்ப்பாணம் – வடமராட்சி – கரவெட்டி பிரதேசத்தில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியுள்ளது. கரவெட்டி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட கரணவாய் ஜே/350 கிராம சேவையாளர் பிரிவில் உள்ள வீடு ஒன்றில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியுள்ளது. நேற்று புதன்கிழமை பிற்பகல் 2 மணியளவில் சமையல்... Read more »

இரணைமடுக் குளம் வான்பாய்கிறது…!

கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கன மழையால் கனகாம்பிகை குளம் வான் பாய ஆரம்பித்துள்ளது. கனகாம்பிகை குளம் வான் பாய ஆரம்பித்துள்ளமையால் இரத்தினபுரம், ஆனந்தபுரம் போன்ற தாழ்நிலப் பிரதேச மக்களை அவதானமாக இருக்குமாறு கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு அறிவுறுத்தியுள்ளது. Read more »

நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்புக்காக போராட இணைகின்றன தமிழ் கட்சிகள்!

நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை ஒழித்து, பாராளுமன்ற ஆட்சி அதிகாரமுள்ள முறைமையை வலியுறுத்தி தமிழ் தரப்புக்கள் ஒன்றிணைந்து போராட்டங்களை முன்னெடுக்கப் பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன் முன்னோடி கலந்துரையாடல் எதிர்வரும் சனிக்கிழமை இடம்பெறவுள்ளது. இந்த கலந்துரையாடலுக்கு தமிழ் அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புக்கள், மனித உரிமை அமைப்புக்கள்... Read more »

வெட்கம் கெட்ட ஜனாதிபதி: மூவின மக்களும் ஒன்றிணைந்து விரட்டுங்கள் – சரத் பொன்சேகா.

“கொழும்பு – காலிமுகத்திடலில் ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டு இளையோர்கள் தொடர்ந்து முன்னெடுத்துவரும் போராட்டம் உன்னதமானது. இந்தப் போராட்டத்தில் சிங்களம், தமிழ், முஸ்லிம் என மூவின மக்களும் ஒன்றிணைந்து பங்கேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை வீட்டுக்கு விரட்டியக்க வேண்டும்” என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற... Read more »

ஜனாதிபதி கோட்டாபயவை இயக்கும் மறைகரம்: கசிந்த தகவல்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பின்னர் மறைகரம் ஒன்று செயற்படுவதாகவும் நாட்டின் பொருளாதாரத்தை அந்த மறைகரமே அழித்தது எனவும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வீரசுமன வீரசிங்க தெரிவித்துள்ளார்.   11 கட்சிகள் வழங்கிய யோசனைகளை நிறைவேற்றவிடாமல்  அந்த மறைகரம் ஜனாதிபதியை தடுக்கின்றது... Read more »

உக்ரைனில் புட்டின் இனப்படுகொலையை நடத்துகின்றார் : அமெரிக்க ஜனாதிபதி.

 உக்ரைனில் சர்வாதிகாரியான விளாடிமிர் புடின் இனப்படுகொலையை நடத்தி வருவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் முதன்முறையாக தெரிவித்துள்ளார். மேலும் உக்ரேனியனாக இருக்க முடியும் என்ற எண்ணத்தை புடின் துடைக்க முயற்சிக்கிறார் என்பதும் தெளிவாகின்றது என ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அத்தோடு உக்ரைனில் ரஷ்யர்கள் செய்த... Read more »

800 மில்லியன் ரூபா மதிப்புள்ள வீடு குறித்து சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள மைத்திரிபால.

தான் வசிக்கும் வீட்டின் மதிப்பு 800 மில்லியன் ரூபா இல்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தம்மை அவதூறாகப் பேசுவதற்கு எதிரணியினர் இவ்வாறான முட்டாள்தனங்களை உருவாக்கி வருவதாகவும், தனது இல்லம் தொடர்பில் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.... Read more »