சிறைச்சாலைக்கு அழைத்துச்செல்லப்பட்ட 58 சிறைக்கைதிகள் மாயம்!

வட்டரெக்க சிறைச்சாலைக்கு அழைத்துச்செல்லப்பட்ட 58 சிறைக்கைதிகள் காணாமல்போயுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். கைதிகளுக்கான புனர்வாழ்வு திட்டத்தின் ஒரு அங்கமாக இடம் பெறும் வெளிப்புற கட்டுமானப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்த குறித்த கைதிகள், நேற்றைய தினம் மீண்டும் வட்டரக்க சிறைச்சாலைக்கு அழைத்துவரப்பட்டனர். அதன்போது, குறித்த கைதிகள் பயணித்த... Read more »

விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் நாளை!

சபாநாயகர் தலைமையில் நாளை கட்சித் தலைவர்களின் விசேட கூட்டமொன்று கூட்டப்பட்டுள்ளது. நாளை பிற்பகல் 3 மணிக்கு நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் கட்சித் தலைவர்களின் கூட்டத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. தற்போதைய அரசியல் நெருக்கடி மற்றும் நாட்டில் தற்போது நிலவும் முரண்பாடுகள் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பில்... Read more »

பொலிஸார் விடுத்த கோரிக்கை நீதிமன்றால் ஒத்திவைப்பு!

ஜனாதிபதி செயலக நுழைவாயிலில் உள்ள தடைகளை அகற்றக் கோரி உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு பொலிஸார் நீதிமன்றில் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளனர். இந்தக் கோரிக்கை மீதான விசாரணையை எதிர்வரும் 12 ஆம் திகதி நடைபெறும் என கொழும்பு நீதவான் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பொலிஸார் முன்வைத்த இந்த... Read more »

குடிவரவு – குடியகல்வு அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ள அறிவிப்பு!

நாட்டில் சட்டம் ஒழுங்கு முறையாக உறுதிப்படுத்தப்படாவிட்டால் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக இலங்கை குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். சிலர் நாட்டை விட்டு வெளியேறுவது குறித்து பேசப்படுவதால், தமது அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல் காணப்படுவதாக குடிவரவு குடியகல்வு அதிகாரிகள தொழிற்சங்கம்... Read more »

மஹிந்தவை உடனடியாக கைது செய்யுமாறு கோரிக்கை!

நாட்டில் நேற்றைய தினம் இடம்பெற்ற ‘மைன கோ கம’ மற்றும் ‘கோட்ட கோ கம’ போராட்டத்தின் மீதான தாக்குதலை திட்டமிட்ட முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை உடனடியாக கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறு சட்டத்தரணிகள் பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இன்று... Read more »

கொழும்பு கங்காராமைக்கு அருகில் சற்றுமுன்னர் துப்பாக்கிச் சூட்டு சம்பவம்….!

கொழும்பு கங்காராமைக்கு அருகில் சற்றுமுன்னர் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் பதிவாகியுள்ளது.மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீது தாக்குதல் நடத்தப்பட்ட பகுதியிலேயே இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் பதிவாகியுள்ளது. Read more »

போர்க்களமாக காணப்படும் கொழும்பு..! வீதிகளில் எரிந்து கிடக்கும் வாகனங்கள்.

கொழும்பில் அரசுக்கு எதிரான போராட்டக்காரர்கள் மீது மஹிந்த ராஜபக்ஸவுக்கு ஆதரவான காடையர்கள் குழு நடத்திய தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து உருவான வன்செயல்களில் வாகனங்கள் தீயிட்டு கொழுத்தப்பட்டு எரிந்து கிடக்கும் காட்சிகளை காண முடிகிறது. ஆங்காங்கே இராணுவம் மற்றும் அதிரடிப்படையினர் நிலைகொண்டிருக்கும் நிலையில் போர்க்களம்போல் கொழும்பு... Read more »

போராட்டக்காரர்களின் தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்த பிரதேசசபை தவிசாளர் மரணம்..!

அரசுக்கு எதிரான போராட்டக்காரர்களின் தாக்குதலில் படுகாயமடைந்த இமதுவ பிரதேசசபை தவிசாளர் உயிரிழந்துள்ளார். நேற்றய தினம் இரவு இமதுவ பிரதேசசபை தவிசாளர் ஏ.வி.சரத் குமார வீட்டை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள், தவிசாளர் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். தாக்குதலில் பலத்த காயமடைந்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் இன்று... Read more »

மஹிந்த ராஜபக்ஸ குடும்பத்துடன் வந்துள்ளதாக வெளியான தகவல்..! கிழக்கு கடற்படை கட்டளை தலைமையகத்தை முடக்கி மக்கள் போராட்டம்.. |

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ மற்றும் அவருடைய குடும்பஸ்த்தினர் பாதுகாப்புக்காக திருகோணமலை கிழக்கு கடற்படை கட்டளை முகாமிற்கு அழைத்துவரப்பட்டதாக வெளியான தகவலையடுத்து பொதுமக்கள் கடற்படை முகாம் வாயிலை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திவருகின்றனர். பெருமளவில் கடற்படைமுகாமில் கூடிய பொதுமக்கள் வாயிலில் நின்று கோஷங்களை எழுப்பி வருகின்றனர். Read more »

தென் இலங்கையின் இரு அணிகளும் தமிழ் மக்களின் நண்பர்கள் அல்லர்…..! சி.அ.யோதிலிங்கம்.

தென்னிலங்கையில் ஆட்சியாளர்களுக்கு எதிரான போராட்டம் பரவலாக இடம் பெற்று வருகின்ற அதே வேளை மகிந்த ராஜபக்ச தன்னுடைய இருப்பையும் தமது குடும்ப ஆட்சியின் இருப்பையும் தக்க வைக்கும் வகையில் கடுமையாக காய்களை நகர்த்தி வருகின்றார். அதில் குறிப்பிடத்தக்க வகையில் வெற்றிகளையும் கண்டு வருகின்றார். அவரது... Read more »