குடிவரவு – குடியகல்வு அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ள அறிவிப்பு!

நாட்டில் சட்டம் ஒழுங்கு முறையாக உறுதிப்படுத்தப்படாவிட்டால் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக இலங்கை குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

சிலர் நாட்டை விட்டு வெளியேறுவது குறித்து பேசப்படுவதால், தமது அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல் காணப்படுவதாக குடிவரவு குடியகல்வு அதிகாரிகள தொழிற்சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கிணங்க, தமது கடமைகளுக்கு கடுமையான அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால், நாட்டில் சட்டம் ஒழுங்கை உடனடியாக நிலைநாட்டி, தமது அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு ஜனாதிபதி, சபாநாயகர் மற்றும் பாதுகாப்பு தரப்பினரிடம் குடிவரவு குடியகல்வு அதிகாரிகளின் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews