பொலிஸார் விடுத்த கோரிக்கை நீதிமன்றால் ஒத்திவைப்பு!

ஜனாதிபதி செயலக நுழைவாயிலில் உள்ள தடைகளை அகற்றக் கோரி உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு பொலிஸார் நீதிமன்றில் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளனர்.

இந்தக் கோரிக்கை மீதான விசாரணையை எதிர்வரும் 12 ஆம் திகதி நடைபெறும் என கொழும்பு நீதவான் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பொலிஸார் முன்வைத்த இந்த கோரிக்கை கொழும்பு பிரதான நீதவான் நந்தன அமரசிங்க முன்னிலையில் இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது குறித்த கோரிக்கை மீதான பரிசீலனையை எதிர்வரும் 12 ஆம் திகதி வரை ஒத்திவைப்பதாக பிரதம நீதவான் உத்தரவிட்டார்.
காலி முகத்திடலில் இடம்பெற்று வரும் ‘கோட்டகோகம’ போராட்டத்தின் காரணமாக ஜனாதிபதி செயலகத்துக்கான நுழைவாயிலுக்கு இடையூறு ஏற்படுவதாக கோரி கடந்த வெள்ளிக்கிழமை கோட்டை பொலிஸார் நீதிமன்றில் கோரிக்கை ஒன்றை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews