மறு அறிவித்தல் வரை மட்டக்களப்பின் பல இடங்களில் எரிவாயு விநியோகம் இடம்பெறாது.

மறு அறிவித்தல் வரை மட்டக்களப்பு, காத்தான்குடி, ஏராவூர், செங்கலடி, வாழைச்சேனை, ஓட்டமாவடி, வாகரை, நாவலடி, ஆகிய பிரதேசங்களுக்கு சமையல் எரிவாயு விநியோகமும் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சமையல் எரிவாயு விநியோகம் செய்த இடங்களில் பொதுமக்கள் வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் மட்டக்களப்பு மாவட்டத்தின் எரிவாயு... Read more »

மட்டக்களப்பில் சுவாமி விபுலானந்தரின் 75 ஆவது சிரார்த்த தின நிகழ்வு.

சுவாமி விபுலானந்தரின் 75 ஆவது சிரார்த்த தின நிகழ்வு மிக சிறப்பாக மட்டக்களப்பில் நடைபெற்றது. மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்றத்துடன் சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு விழாச்சபை இணைந்த ஏற்பாடு செய்த சுவாமி விபுலானந்தரின் 75 ஆவது சிரார்த்த தின நிகழ்வு மட்டக்களப்பு நீருற்று பூங்கா... Read more »

கதிகாமம் நோக்கிய பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் குடிநீர் விநியோகம்.

முருகனின் படைவீடுகளில் ஒன்றாக கருதப்படும் கதிகாமம் நோக்கி யால காட்டின் ஊடாக செல்லும் பாதயாத்திரை பக்தர்களின் நன்மை கருதி மட்டக்களப்பு மாநகரசபையினால் அன்னதானம் மற்றும் குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன எதிர்வரும் 22ஆம் திகதி யால காட்டின் ஊடான பாதையாத்திரிகர்கள் செல்லும் வகையில் பாதை... Read more »

சுவாமி விபுலானந்தர் அடிகளாரின் 75 ஆவது மகாசமாதி தின நிகழ்வு.

சுவாமி விபுலானந்த அடிகளாரின் 75 ஆவது மகாசமாதி தின நிகழ்வு, காரைதீவு, சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்த மணி மண்டபத்தில் இடம்பெற்றது. விபுலாநந்தர் ஞாபகார்த்தப் பணி மன்றத்தினரின் ஏற்பாட்டில், இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையோடு, சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்தப் பணி மன்றத்தின் தலைவர்,... Read more »

முன்னாள் பிரதம பொலிஸ் அதிகாரியை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு.

எரிபொருளை நிரப்புவதற்காக வருகை சென்ற முன்னாள் பிரதம பொலிஸ் அதிகாரியை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. கடந்த 18 ஆம் திகதி மாலை அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் உள்ள எரிபொருள் நிலையத்தில் எரிபொருள் நிரப்புவதற்காக மோட்டார் சைக்கிள் ஒன்றில் சென்ற... Read more »

மட்டு.அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலய ஆடி அமாவசை மஹோற்சவம்.

மட்டக்களப்பு அமிர்தகழி அருள்மிகு ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலய ஆடி அமாவசை மஹோற்சவத்தின் 2 நாள் பெருவிழா சிறப்பாக நடைபெற்றது இலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க ஆலயங்களுல் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு அமிர்தகழி அருள்மிகு ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் 2 நாள் பெருவிழா ஆலய பிரதம குரு... Read more »

மட்டு.போதனா வைத்தியசாலைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்.

எரிபொருள் நிலையத்தில் வைத்தியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் மீது தாக்குதலை கண்டித்து கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு முன்பாக கவன ஈர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது. இன்று நண்பகல் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு முன்பாக ஒன்றுகூடிய வைத்தியர்கள் மற்றும் சுகாதார துறையினை சேர்ந்தவர்கள் இந்த... Read more »

எழுத்து மூலமான ஆவணங்களை தருவதற்கு ரணில் தயராக இருக்கவில்லை:பா.அரியநேந்திரன்.

ஜனாதிபதி வாக்களிப்பில் பலர் டலஸ் அழகப்பெருமவினை நம்பவைத்து ஏமாற்றியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் இன்று நடத்திய ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு... Read more »

காரைதீவு பிரதேச செயலகப்பிரிவில் சமையல் எரிவாயு விநியோகம்.

காரைதீவு பிரதேச செயலகப்பிரிவிலுள்ள 12 பிரிவுகளுக்கும் இரண்டு மாதங்களுக்கு பின் இன்று சமையல் எரிவாயு வழங்கப்பட்டது. காரைதீவு மாளிகைக்காடு மாவடிப்பள்ளி கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கு பிரதேச செயலாளரினால் வழங்கப்பட்ட வினியோக அட்டையின் கீழ் காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரி மைதானத்தில் எரிவாயு சிலின்டர்கள் வழங்கப்பட்டது.... Read more »

சேலைன் போத்தலுடன் வாக்களித்த எம்.பி!

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு பாராளுமன்றத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்த போதுசுகயீனமடைந்திருந்த எம்.பியான சமந் பிரிய ஹேரத், சேலைன் போத்தலுடன் சபைக்குள் வந்திருந்தார். அவருடைய பெயர், அட்டவணையில் 223 ஆவதாக காணப்பட்டது. எனினும், இடைநடுவிலேயே அவருக்கு வாக்களிப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்குவதற்கு ஏதாவது ஆட்சேபனைகள் இருக்கின்றனவா என தெரிவத்தாட்சி அதிகாரியான... Read more »