கதிகாமம் நோக்கிய பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் குடிநீர் விநியோகம்.

முருகனின் படைவீடுகளில் ஒன்றாக கருதப்படும் கதிகாமம் நோக்கி யால காட்டின் ஊடாக செல்லும் பாதயாத்திரை பக்தர்களின் நன்மை கருதி மட்டக்களப்பு மாநகரசபையினால் அன்னதானம் மற்றும் குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன

எதிர்வரும் 22ஆம் திகதி யால காட்டின் ஊடான பாதையாத்திரிகர்கள் செல்லும் வகையில் பாதை திறக்கப்படவுள்ளது. இந்த நிலையில் யாத்திரிகை செல்லும் பக்தர்களின் நன்மை கருதி மட்டக்களப்பு மாநகரசபையினால் அன்னதானம் வழங்கும் செயற்பாடும் குடிநீர் வழங்கும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதற்கான குழுவினர் மட்டக்களப்பு மாநகரசபையிலிருந்து தமது பயணத்தினை நேற்று ஆரம்பித்தனர்.

மட்டக்களப்பு மாநகரசபையில் உள்ள ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொண்டு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் மற்றும் மாநகரசபை உறுப்பினர்கள்,ஊழியர்களினால் குழுவினரை வழியனுப்பிவைத்தனர்.

இதற்கான உதவிகளை மட்டக்களப்பு நகரில் உள்ள வர்த்தகர்கள்,நன்கொடையாளர்கள் வழங்கியுள்ளனர்.

வடகிழக்கிலிருந்து அதிகளவான பக்தர்கள் பாதயாத்திரையாக செல்வதன் காரணமாக தற்போதைய எரிபொருள் நெருக்கடி காரணமாக பாதயாத்திரிகளுக்கான தேவையானவற்றை பெற்றுக்கொள்வதில் சிரமங்களை எதிர்கொள்ளும் நிலையேற்படும் என்ற காரணத்தினாலேயே மட்டக்களப்பு மாநகரசபையிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைவாக இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews