நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற ஐந்து விபத்துக்களில் ஐவர் உயிரிழப்பு.

நாடளாவிய ரீதியில் நேற்று இடம்பெற்ற ஐந்து விபத்துக்களில், ஐவர் உயிரிழந்துள்ளனர் என்று, பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதற்கமைவாக இரத்தினபுரி, கஹவத்த பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட எம்பிலப்பிட்டிய வீதி, பெல்மடுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இரத்தினபுரி பனாப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயது இளைஞர் உயிரிழந்துள்ளார். பெல்மடுல்ல... Read more »

கொவிட் உயிரிழப்பு அதிகரிப்பு!

நாட்டில் மேலும் 5 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். உயிரிழந்தவர்களில் 60 வயதுக்கு மேற்பட்ட 3 ஆண்களும் 2 பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, நாட்டில் மேலும் 162 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார... Read more »

கொழும்பு வரும் கச்சா எண்ணெய் கப்பல்

100,000 மெட்ரிக் தொன் கச்சா எண்ணெய் சரக்கு கப்பல் ஒன்று இன்று இரவு கொழும்பை வந்தடையவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். ட்விட்டர் பதிவொன்றில் அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். 120,000 மெட்ரிக் தொன்கள் கொண்ட 2வது கச்சா எண்ணெய் சரக்கு கப்பல் ஒகஸ்ட்... Read more »

எந்த அரசாங்கத்தை அமைப்பது என்ற தீர்மானத்துக்கு அரசாங்கம் வர வேண்டும் -வாசுதேவ நாணயக்கார.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தை அமைப்பதா, சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதா என்ற தீர்மானத்துக்கு தற்போதைய அரசாங்கம் வரவேண்டும் என்று, ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். இலங்கை கம்யூனிஸ் கட்சியின் அலுவலகத்தில்  நேற்று (13) நடைபெற்ற... Read more »

75 நிமிடங்கள் கடலில் மிதந்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு!

இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழகம் இராமேஸ்வரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர், இரு கைகளிலும், இந்திய தேசிய கொடியை ஏந்தி, பாக் ஜலசந்தி கடலில், ஜல யோகா செய்து, தொடர்ந்து 75 நிமிடங்கள் மிதந்து, மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.... Read more »

கல்வியங்காட்டில் திருட்டு போன மோட்டர் சைக்கிள் மீட்பு!

யாழ்ப்பாணம் கல்வியங்காடு கலைமகள் வீதியில் அமைந்துள்ள வீடோன்றில் நேற்று முன்தினம்  நள்ளிரவு (12) திருடப்பட்ட டிஸ்கவர் மோட்டர் சைக்கிள் நேற்று (13) காலை பொது மக்கள் உதவியுடன் தச்சன் தோப்பு பிள்ளையார் கோவில் முன்பாக நிறுத்தப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது. திருடப்பட்ட மோட்டர் சைக்கிள் தச்சன்... Read more »

சர்வதேச இளைஞர் தினத்தினை முன்னிட்டு கிளிநொச்சியில் மரநடுகை…..!

 சர்வதேச இளைஞர் தினத்தினை முன்னிட்டு கிளிநொச்சி தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் கரைச்சி பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தினால் மரநடுகை மற்றும் நகரத்தை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டம் நேற்று காலை முன்னெடுக்கப்பட்டது. கிளிநொச்சி தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் மர நடுகை முன்னெடுக்கப்பட்டதுடன், டிப்போ... Read more »

அக்கராயன் கிழக்கு கிராம மக்களின் தேவைகளை கேட்டறிந்து கொண்ட சிறீதரன் எம்.பி.

கிளிநொச்சி அக்கராயன் கிழக்கு மக்களின் தேவைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் கேட்டறிந்து கொண்டார். அக்கராயன் கிழக்கு பொது நோக்கு மண்டபத்தில் நேற்று  முன் தினம் கிராம மக்களுடனான சந்திப்பு நடைபெற்றது. கிளிநொச்சி மாவட்டத்தில் பொருளாதார ரீதியில் மிகவும்... Read more »

பாடசாலைகள் இனி வழமை போன்று…!

நாடு முழுவதும் எதிர்வரும் 15 ஆம் திகதி  திங்கட்கிழமை முதல் அனைத்து அரச பாடசாலைகளும் வாரத்தின் 5 நாட்களும் வழமை போன்று  இயங்கும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.. இவ் அறிவிப்பு நேற்று வெளியாகியள்ளது. Read more »

காணி அபகரிப்பால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வடமாகாண ஆளுநரால் விடுக்கப்பட்ட அறிவிப்பு….!

வடமாகாணத்தில் காணி மோசடியினால் பாதிக்கப்பட்டவர்கள் தமது விபரங்களை ஆளுநர் செயலகத்தில் சமர்ப்பிக்கும்படி ஆளுநர் ஜீவன் தியாகராஜா கோரிக்கை விடுத்திருக்கின்றார். இது குறித்து அவர் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, வடமாகாணத்தில் தனியார் காணிகள் பலவற்றை பல்வேறு வழிகளில் மோசடி செய்து ஆக்கிரமித்துள்ள சம்பவங்கள் இடம்பெற்றிருப்பதை... Read more »