யாழில் திடீர் மூச்சுத்திணறலால் சிசு பரிதாபமாக உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் சாவகச்சேரி – கிராம்புவில் பகுதியை சேர்ந்த பிறந்து 54 நாட்களேயான பெண் சிசு ஒன்று திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளது. இச் சம்பவம் நேற்றையதினம் (20) ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. குழந்தை மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில் பெற்றோர் உடனடியாக வைத்தியசாலைக்கு அழைத்து வந்த... Read more »

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 14 தமிழக மீனவர்கள் விடுதலை

நாகை, காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள், நெடுந்தீவு கடலினருகே கடந்த 17ஆம் திகதி இரவு மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படையினரhல் எல்லை தாண்டிய மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் விசைப்படகுடன் கைது செய்யப்பட்டு காங்கேசன்துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதனையடுத்து இலங்கை கடற்படையால்... Read more »

13 திருத்த சட்டம் முழுமையக அழும்படுத்தப்படவேண்டும்– தமிழர் சமூக ஜனநாயக கட்சியின் தலைவர் திருநாவுக்கரசு..!

இந்திய அரசியல் யாப்பின் கொப்பியாக இந்தியா 1987ம் ஆண்டு கொண்டுவந்த 13 வது திருத்த சட்டத்தில் கொண்டு வரப்பட்ட அதிகாரங்கள் வடக்கு கிழக்கில் முழுமைப்படுத்தப்படவேண்டும். அதில் நிலம். நிதி,  சட்டம் ஒழுங்கு அதிகாரங்கள் செயல்படுத்த வேண்டும் என  (வரதராஜ பொருமாள்) தமிழர் சமூக ஜனநாயக... Read more »

மாவீரர்கள் பெற்றோர் கிளிநொச்சியில் கௌரவிப்பு….!

மாவீரரின் பெற்றோர், உறவினர்களை மதிப்பளிக்கும் நிகழ்வு 20.11.2022 நேற்றைய தினம் கிளிநொச்சி வட்டக்கச்சியில் இடம்பெற்றது. வட்டக்கச்சி சந்தையடிப் பகுதியில் அமைக்கப்பட்ட மண்டபத்தில் குறித்த நிகழ்வு வட்டக்கச்சி ஏற்பாட்டு குழுவினரால் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, ஈழ விடுதலைப் போரில் தம்மை அர்ப்பணித்த மாவீர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கௌரவிக்கப்பட்டனர்.... Read more »

பருத்தித்துறையில் நினைவு மண்டபத்தில்  மாவீரர்களுக்கு அஞ்சலி….!

பருத்தித்துறையில் நீதிமன்ற வீதியில் ஒழுங்கமைக்கப்பட்ட மாவீரர் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவு மண்டபத்தில் மாவீரர் நினைவேந்தல் வாரத்தில் மாவீர்களுக்கு அஞ்சலி நிகழ்வு இன்று காலை 9:30 மணியளவில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் நடாத்தப்பட்டுள்ளது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணி செயலாளர் திருமதி... Read more »

தொடருந்தில் மோதுண்டு மோதுண்டு 16 வயது சிறுமி ஒருவர் உயிரிழப்பு!

கண்டி – அஸ்கிரிய பகுதியில் தொடரூந்தில் மோதுண்டு சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். 16 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மேலதிக வகுப்பிற்கு சென்று திரும்பிக்கொண்டிருக்கையிலேயே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது. சிறுமியின் சடலம் கண்டி போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் விசாரணைகள் இடம்பெற்று... Read more »

வரவு செலவுத் திட்டம் நிறைவேறிய பின் மாகாணங்களுக்கு புதிய ஆளுநர்கள்!

அரசாங்கத்தின் 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர் ஒன்பது மாகாணங்களுக்கும் புதிய ஆளுநர்களை நியமிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முடிவெடுத்துள்ளதாக தெரியவருகிறது. புதிய மாகாண ஆளுநர்களில் ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார நியமிக்கப்படவுள்ளதாக அறியமுடிகின்றது. அவர்... Read more »

மனைவியுடன் வாக்குவாதம் செய்த கணவனை மூவர் அடித்து கொலை !

மாத்தறை ஊருபொக்க காவல்துறை பிரிவிற்குற்பட்ட கடவலகம பகுதியில் ஒருவரை மூவர் அடித்து கொலை செய்துள்ளாத காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று (21) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. அதே பிரதேசத்தை சேர்ந்த 51 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே... Read more »

சாதாரணதர பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை இவ்வருடம் டிசம்பர் மாதம் நடைபெற இருந்தாலும் அந்தப்பரீட்சை அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்திற்குப் பின்னரேயே நடத்தப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்... Read more »

சீன கப்பலின் வருகையால் ஏற்பட்ட சிக்கல்:அரசாங்கம் எடுத்துள்ள புதிய தீர்மானம்

சீன கப்பலின் வருகை தொடர்பில் உருவான இராஜதந்திர நெருக்கடியை தொடர்ந்து அரசாங்கம் புதிய தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளது. இதற்கமைய இலங்கைக்குள் நுழைகின்ற கப்பல்கள் மற்றும் விமானங்களிற்கு அனுமதி வழங்குகின்றமை குறித்து தீர்மானிப்பதற்காக அரசாங்கம் அதன் தேசிய பாதுகாப்பு கட்டமைப்பிற்குள் புதிய பொறிமுறையை உருவாக்கவுள்ளது. இது... Read more »