13 திருத்த சட்டம் முழுமையக அழும்படுத்தப்படவேண்டும்– தமிழர் சமூக ஜனநாயக கட்சியின் தலைவர் திருநாவுக்கரசு..!

இந்திய அரசியல் யாப்பின் கொப்பியாக இந்தியா 1987ம் ஆண்டு கொண்டுவந்த 13 வது திருத்த சட்டத்தில் கொண்டு வரப்பட்ட அதிகாரங்கள் வடக்கு கிழக்கில் முழுமைப்படுத்தப்படவேண்டும். அதில் நிலம். நிதி,  சட்டம் ஒழுங்கு அதிகாரங்கள் செயல்படுத்த வேண்டும் என  (வரதராஜ பொருமாள்) தமிழர் சமூக ஜனநாயக கட்சியின் தலைவர் திருநாவுக்கரசு தெரிவித்தார்.

தமிழர் சமூக ஜனநாயக கட்சி தியாகிகள் தினத்தையிட்டு நேற்று முன் தினம் சனிக்கிழமை (19) படுகொலை செய்யப்பட்ட ஈ.பிஆர்.எல்.எப். அமைப்பின் தலைவர் பத்மநாபாநாபாவின் 71 வது பிறந்த தினத்தையிட்டு மட்டக்களப்பு வீச்சுகல் முனையில் மாவட்ட இணைப்பாளரும், வவுணதீவு உள்ளூராட்சி மன்ற உறுப்பினருமான எஸ்.குகநாதன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு அவர் பேசுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு எங்களுக்கு உத்தியோக பூர்வமான அழைப்பும் விடுக்கவில்லை.  அது ஒரு தந்திரோபாய அழைப்பே தவிர அது விசுவாசமான அழைப்பு அல்ல. சமஷ்டி என்று சொன்னால் நாங்கள் 13 வது திருத்தசட்டத்தை தவிர வேறு ஒன்றையும் கதைக்கவில்லை கதைப்பது முட்டாள்தனம்.

13 திருத்தசட்டம் மாகாணசபை முறைமை முழுமைபடுத்துவது,  நாங்கள் முல்படி என்றால் அவர்கள் இரண்டாம் படி என்பார்கள்.  நாங்கள் முட்டாள் தனமாக கதைக்க முடியாது. 13 உள்ள அதிகாரங்களை முழுமைப்படுத்துமாறு கேட்டவேண்டும். அதனை முழுமைபடுத்தினால் கணிசமான விடையங்கள் வரும் (உதாரணம் ) தமிழ் நாட்டில் ஸ்ராலினிக்கு கீழ் 2 இலட்சம் பொலிஸ் உள்ளது.

அதற்குள்ள இருக்கின்ற விடையங்களை  நியதி சட்டங்களாக்கி அதனை புதுப்பித்து எடுக்கவேண்டும். அதனை முதலில் செய்யவேண்டும் அதனை விடுத்து அதை இல்லாமல் செய்து விட்டு புதிதாக கேட்பது ஜென்மத்திலும் நடக்காது. இது தமிழ் அரசியல் தலைவர்களுக்கு தெரியாதது அல்ல.

இந்த 13 வது திருத்தச் சட்ட மூலம் மாகாணசபை இல்லாமல் போவதற்கான ஒரு அபாயகரமான நிலை இருக்கின்றது.  என்பதுடன் 1988 இல் இருந்து 2022 வரையும் இருக்கு கூடிய மாகாண சபை அது.  துரதிஸ்ட வசமாக தமிழ் அரசியல் தலைவர்கள் என்று சொல்லப்படுகின்றவர்கள் வெவ்வேறு தீர்வுகளை பற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர்.

எனவே வேறுவேற தீர்வுகளை பேசுவது புதிய அரசியல் யாப்பின் ஊடாக பேசுவது எங்களுக்கு என்ன அதிகார பகிர்வு நடக்கின்றது. என்றாலும் அது மாகாணசபை என்ற பானைக்குள் தான் போடப்பட வேண்டியுள்ளது.  எனவே 13 இல் உள்ள அதிகாரங்களை முழுமைப்படுத்தவேண்டும்.

இந்திய மாநிலங்களுக்கிடையிலான அதிகாரங்களை கொண்ட அமைப்பே இந்த  அதிகாரங்களை மத்தியில் நீண்டகாலமாக எடுத்து வருகின்றது. எனவே  சட்டம் ஒழுங்கு நிலம். போதனா வைத்தியசாலைகள் தவிர்ந்த வைத்தியசாலைகள் தேசிய பாடசாலை தவிர்ந்த பாடசாலைகள், நெடுஞ்சாலைகள் தவிர்ந்த பாதைகள், உள்ளூர்வரிகள், தொல்பொருள் பற்றிய விடையங்கள் இருக்கின்றது அந்த நியதி சட்டங்களை உருவாக்கி பாதுகாக்கவேண்டும்.

எனவே அதனை இல்லாமல் செய்தால் நாங்கள் நிற்பதற்கான இடமில்லாமல் போய்விடும் என்ற அபாயம் இருக்கின்றது அந்த அபாயத்தை விளங்கி கொள்ளாமல் தமிழ் அரசியல் தலைவர்கள் சமஷ;டி என வேறு வேறு தீர்வுகளை பேசிக் கொண்டிருப்பது மிக ஆபத்தான விடையம்.

1979 ம் ஆண்டில் இருந்து பயங்கரவாத தடைச் சட்டம் இருக்கின்றது.  இந்த பயங்கரவாத தடைச்சட்டம் மனித குல வரலாற்றில் அடிமை  சமூகத்தில் விற்பதற்கும், வாங்குவதற்கும்,  இருந்த மாதிரி ஆட்களை காணாமல் செல்வதற்கும் கொல்வதற்கும், 18 மாதங்கள் தடுத்துவைப்பதற்கும், ஏன் நெல்சன் மண்டலா சிறையில் வாழ்ந்த காலத்தை விட கூடுதலான காலம் தடுத்துவைப்பதற்குமான உரிமை கொண்ட காட்டுமிரான்டி சட்டம் வரும் போது தென்ஆபிரிக்க நிற வெறிச் சட்டம் என சொல்லப்பட்டது.  இந்த சட்டம் நீக்கப்படவேண்டும்.

அடுத்த வருடம் பாரிய பொருளாதார  நெருக்கடி ஏற்படபோகின்றதுடன் பஞ்சம் ஏற்படவுள்ளது.   ஜ.எம்.எப் ஆல் எந்த அதியங்களையும் நிகழ்த்த முடியாதுல. எனவே உள்ளூர் உற்பத்தியை பாதுகாக்கவேண்டும்.

விவசாயிகளுகக்கும் மீனவர்களுக்கும் அரசாங்கம் உதவி செய்ய வேண்டிய தேவை அத்துடன் கல்வி சுகாதாரம் சமுர்த்தி போன்ற துறைகள் பாதுகாக்கப்படவேண்டும். சமூக பாதுகாப்பு முன் உரிமை பெறவேண்டும்.

மலையக தோட்ட தொழிலாளர்கள் இலங்கையின் வருமானத்தில் பெரும் பகுதியை ஈட்டிக் கொடுத்தவர்கள். ஓக்டோபர் 23 ம் திகதி அவர்கள் நாட்டிற்கு வந்து 200 வருடங்கள் ஆகியும் நிலமோ, ஆவணமே இல்லாத நிலவரத்தில் உள்ளனர்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 80 வீதமான நிலம் அரசுக்கு சொந்தமானது எனவும்,  மலையகத்தில் பயன்படுத்தப்படாத 2 இலச்சத்து 75 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

எனவே மலையக மக்களுக்கு அரை ஏக்கர் படி நிலம் பகிர்ந்து கொடுக்கவேண்டும்.
முதலாவது புரையோடிப்போன இனப் பிரச்சனையை தீர்கப்படவேண்டும். அதனை தீர்க்காத மட்டில் இனங்களுக்கான வெறுப்பு அரசியல் மதவாத இனவாத அரசியல் இருக்கும் மட்டிலும் துரதிஸ்டவசமாக இந்த நாடு உருப்படுவது கஷ்ரம் என்றார்

Recommended For You

About the Author: Editor Elukainews