மொட்டுக் கட்சியை விட்டு வெளியேறுகிறாரா சரத் வீரசேகர…!

நாட்டைப் பிரிக்கும் நிலை ஏற்பட்டால் மாத்திரமே நான் மொட்டுக் கட்சியை விட்டுச் செல்வேன். அதுவரை இந்தக் கட்சியில்தான் இருப்பேன்” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர்... Read more »

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம்: ஊடகத்துறையின் சுயாதீனத்தைப் பாதுகாக்க போராட்டத்திற்கு அழைப்பு.

அரசினால் தற்போது முன்வைக்கப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் சட்டமாக்கப்பட்டால் ஜனநாயகத்தின் நான்காவது தூண் எனப்படும் ஊடகத்துறை மிக மோசமாக நசுக்கப்படும் என்ற அச்சம் காணப்படுகிறது. ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக தங்களது கடமைகளை மேற்கொள்ள முடியாத நிலைமை ஏற்படும். எனவே குறித்த சட்டமூலத்திற்கு எதிராக குரல்... Read more »

சவேந்திரவுக்கு எதிராக விமல் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு: மறுக்கும் பாதுகாப்பு அமைச்சு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச, பாதுகாப்புத் தலைமை அதிகாரி சவேந்திர சில்வாவுக்கு எதிராக சுமத்திய குற்றச்சாட்டை, இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு நிராகரித்துள்ளது. முன்னாள் இராணுவத் தளபதியுமான சவேந்திர சில்வா, அரகலய போராட்டத்தின்போது இடைக்கால நிர்வாகத்தை உருவாக்கும் சதித்திட்டத்திற்கு ஆதரவளித்ததாக... Read more »

அவுஸ்திரேலியாவில் கல்வி; இலங்கை மாணவர்களை ஏமாற்றும் ஆள்கடத்தல்காரர்கள்!

அவுஸ்திரேலியாவில் நிரந்தர விசாவை வழங்குவதாக தெரிவித்து இலங்கை மாணவர்களையும் குடும்பங்களையும் ஆள்கடத்தல்காரர்கள் ஏமாற்றும் நடவடிக்கை குறித்து அவுஸ்திரேலியன் அசோசியேட்டட் பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அவுஸ்திரேலியாவிற்கு நிரந்தர விசாவை வழங்குவதாக தெரிவித்து இலங்கை மாணவர்களையும் குடும்பங்களையும் ஏமாறும் நடவடிக்கைகளில் ஆள்கடத்தல்காரர்கள் ஈடுபட்டுள்ளனர் என தெரிவித்தள்ள அவுஸ்திரேலிய... Read more »

கிளிநொச்சியில் ஆளுநர் தலைமையில்  காணிகளின் பயன்பாடு தொடர்பில் கலந்து உரையாடல்…!

கிளிநொச்சியில் அரச காணிகள் மற்றும் பயன்பாடுகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்று புதன்கிழமை வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தலைமையில் கிளிநொச்சியில் அமைந்துள்ள உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்தில்  இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலில் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள அரச காணிகளின் பயன்பாடு தொடர்பில்... Read more »

நாவலர் கலாசார மண்டப விவகாரம்! யாழ்ப்பாண மேல்நீதிமன்றின் இடைக்கால கட்டளை நீடிப்பு

யாழ்ப்பாணம் நாவலர் கலாசார மண்டபத்திலிருந்து யாழ். மாநகர சபையை வடமாகாண ஆளுநர் வெளியேற பணித்தமைக்கு எதிராக யாழ்ப்பாணம் மேல்நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவு மே மாதம் 29ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மேல்நீதிமன்றில் இன்று குறித்த வழக்கு விசாரணைக்காக எடுக்கப்பட்டபோதே நீதிமன்றம் இடைக்கால... Read more »

வவுனிக்குளத்தில் நீராட சென்றவேளை குளத்தில் மூழ்கி சகோதரர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்

முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி வவுனிக்குளத்தில் நீராட சென்றவேளை குளத்தில் மூழ்கி சகோதரர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். குளத்தின் பிரதான வாய்க்கால் பகுதிக்குள் இளைய சகோதரர் நீராடிக்கொண்டிருகும் போது நீரில் அவர் தத்தளிப்பதை கண்டு மூத்த சகோதரர் அவரை காப்பாற்ற முற்படும்போதே இருவரும் உயிரிழந்துள்ளனர். குறித்த சம்பவத்தில்... Read more »

திகதி மாற்றம் செய்யப்பட்ட சோடா போத்தல்கள் மீட்பு – ஊடகங்களுக்கு தகவல் வழங்க மறுத்த பொது சுகாதார பரிசோதகர்

நேற்றையதினம், யாழ். நகர் பகுதியில் உள்ள சில கடைகளிற்கு, காலாவதி திகதி கடந்த சோடா போத்தல்களில், காலாவதி திகதியில் மாற்றம் செய்து, விற்பனைக்காக வைத்திருந்த பெருமளவிலான சோடா போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்தன. இது குறித்து தகவல் பெறுவதற்கு ஊடகவியலாளர் ஒருவரால் யாழ்ப்பாணம்... Read more »

தந்தை செல்வநாயகம் 46வது ஆண்டு நினைவு நாள் அஞ்சலியும் நினவு பேருரையும்…!(video)

தந்தை  செல்வா 46வது ஆண்டு நினைவு நாள் அஞ்சலியும் நினைவுப் பேருரையும் நேற்று 26.04.2023 புதன் கிழமை தந்தை செல்வா நினைவுச் சதுக்கத்தில் இடம்பெற்றது. தந்தை செல்வா நினைவு அறங்காவல் குழுவின் தலைவர் ஓய்வு நிலை ஆயர் ஜெபநேசன் அடிகளார்  தலைமையில் இன்று காலை... Read more »

குருந்தூர் மலை வழக்கு இன்று நீதிமன்றில். சட்டத்தரணிகள் அரசியல் வாதிகளுக்கு அகத்தி அடிகளார் கோரிக்கை…!

குருந்தூர் மலை ஆதி சிவன் கோவில் வழக்கு இன்றைய தினம் முல்லைத்தீவு நீதிமன்றுக்கு வரும் சமயம் கடந்த காலத்தில் காட்டிய அர்ப்பணிப்பு போன்று எமது தமிழ் சட்டதரணிகள் சிறப்பான சமர்ப்பணங்களை மேற்கொள்ள வேண்டுகின்றோம் என தென்கயிலை ஆதீன குரு முதல்வர் அகத்தி அடிகளார் தெரிவித்துள்ளார்.... Read more »