அவுஸ்திரேலியாவில் கல்வி; இலங்கை மாணவர்களை ஏமாற்றும் ஆள்கடத்தல்காரர்கள்!

அவுஸ்திரேலியாவில் நிரந்தர விசாவை வழங்குவதாக தெரிவித்து இலங்கை மாணவர்களையும் குடும்பங்களையும் ஆள்கடத்தல்காரர்கள் ஏமாற்றும் நடவடிக்கை குறித்து அவுஸ்திரேலியன் அசோசியேட்டட் பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவிற்கு நிரந்தர விசாவை வழங்குவதாக தெரிவித்து இலங்கை மாணவர்களையும் குடும்பங்களையும் ஏமாறும் நடவடிக்கைகளில் ஆள்கடத்தல்காரர்கள் ஈடுபட்டுள்ளனர் என தெரிவித்தள்ள அவுஸ்திரேலிய ஊடகம் ஆள்கடத்தல்காரர்கள் தங்களை குடியேற்ற முகவர்களாக காண்பிக்கின்றனர் இதற்காக புதிய உத்திகளை பயன்படுத்துகின்றனர் எனவும் தெரிவித்துள்ளது.

நூற்றுக்கணக்கான குடியேற்றவாசிகள் தங்கள் பெறுமதியான சொத்துக்களை விற்று அவுஸ்திரேலியாவிற்கு வந்துள்ளமையும் ஆள்கடத்தல்காரர்கள் இவர்களிடமிருந்து பெருந்தொகை பணத்தை மோசடி செய்த பின்னர் இவர்களின் கனவுகள் கலைந்துபோயுள்ளமையும் அவுஸ்திரேலிய செனெட் விசாரணையொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

மக்கள் தவறுதலாக வழிநடத்தப்படுகின்றனர் குறிப்பாக கல்விக்காக அவுஸ்திரேலியாவரும்போது அவர்கள் ஏமாற்றப்படுகின்றனர் என மெல்பேர்னிற்கான இலங்கையின் துணை தூதரகத்தை சேர்ந்த அதிகாரி சன்டித் சமரசிங்க தெரிவி;த்துள்ளார்.

அவுஸ்திரேலியாவில் படிப்பை பூர்த்தி செய்த பின்னர் சிறந்த வேலைவாய்ப்பு வழங்கப்படும் என உறுதியளி;த்து இலங்கையர்களை அழைத்துவருகின்றனர் ஆனால் அது நடப்பதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்

இலங்கையிலிருந்து வெளியேற முயல்பவர்கள் தனது பெயரை பயன்படுத்துகின்றனர் என இலங்கையில் பிறந்த அவுஸ்திரேலியாவின் தொழில்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கசன்டிரா பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவில் நிரந்தரமாக குடியேறும் நோக்கத்துடன் வரும் மாணவர்கள் இலக்குவைக்கப்படுகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.அவுஸ்திரேலியாவில் உள்ள சிலர் தவறான தகவல்களை வழங்குகின்றனர் அவர்கள் தகுதிபெற்ற குடியேற்ற முகவர்கள் இல்லை அவர்களிடம் முகவர் அமைப்புகளும் இல்லை ஆனால் அவர்கள் மக்களின் வீடுகளிற்கு சென்று இவ்வளவு பணம் செலுத்தினால் இதனை செய்யலாம் என தெரிவிக்கின்றனர் எனவும் கசன்டிரா பெர்ணான்டோ செனெட் விசாரணையில் தெரிவித்துள்ளார்

போலி முகவர்கள் தங்கள் மோசடி நடவடிக்கைகள் மூலம் பெருமளவு பணம் உழைப்பது தனக்கு தெரியும் என முன்னாள் உள்ளுராட்சி உறுப்பினர் சந்திர பமுகுசிங்க தெரிவித்துள்ளார்.

இது ஒருதிட்டமிட்ட பிரச்சினையா ஆள்கடத்தல்காரர்கள் அவுஸ்திரேலியாவில் செயற்படுகின்றனரா என செனெட் குழுவின் தலைவர் கேள்வி எழுப்பினார் அதற்கு ஆம் என தெரிவித்த பமுனுசிங்க அவர்கள் எதற்கும் பயப்படாதவர்கள் என குறிப்பிட்டார்.இந்த சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த அவுஸ்திரேலியா நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews