சீமெந்து தொழிற்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொன்னாவெளி மக்கள் போராட்டம்

சீமெந்து தொழிற்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொன்னாவெளி மக்கள் போராட்டம் ஒன்றை இன்று முன்னெடுத்தனர். கிளிநொச்சி – பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பொன்னாவெளி கிராமத்தில் டோக்கியோ நிறுவனத்தினால் சீமெந்து தொழிற்சாலை நிறுவுவதற்கு திட்டமிடப்பட்டு அதற்காக ஒரு ஏக்கர் காணியை முதல் கட்டமாக பெற்று ஆய்வு பணிகள்... Read more »

புதுக்குடியிருப்பிலிருந்து மலையகம் நோக்கிய நடைபயணம் கிளிநொச்சியிலிருந்து ஆரம்பமானது

புதுக்குடியிருப்பிலிருந்து மலையகம் நோக்கிய நடைபயணம் கிளிநொச்சியிலிருந்து ஆரம்பமானது. நேற்றைய தினம் புதுக்குடியிருப்பில் ஆரம்பமான நடைபயணம் கிளிநொச்சியில் நிறைவடைந்தது. தொடர்ந்து, இரண்டாம் நாளான இன்று காலை 9 மணியளவில் டிப்போ சத்தியில் ஆரம்பிக்கப்பட்ட பேரணி இரணைமடு சந்தி, முறிகண்டி, மாங்குளம் என கடந்து வவுனியா நோக்கி பயணத்தை... Read more »

யாழ்ப்பாணத்தில் மலையக மக்களின் பேரணிக்கு ஆதரவு தெரிவித்து கவனயீர்ப்பு

03/08/2023 இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் சிவில் அமைப்புக்களின் ஏற்பாட்டில்  மாண்புமிகு மலையக மக்களின் தலைமன்னார் தொடக்கம்  மாத்தளை வரையான  நடைபயணத்துக்கு  ஆதரவாக பேரணி ஒன்று நடத்தப்பட்டது.  அதன் பின்னர் ஒரு அணியினர் வாகனப்பேரணியாக வவுனியா நோக்கி புறப்பட்டனர்.  பேரணியில்  பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரசியல்... Read more »

மாடுகளை திருடிச் சென்ற ஒருவர் கைது!

இன்றையதினம், 3 மாடுகளை வட்டுக்கோட்டை பகுதியில் இருந்து திருடிச் சென்ற ஒருவர் மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கையேஸ் வாகனத்தில் மாடுகளை கடத்துவதாக, மானிப்பாய் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், நவாலி மயானத்துக்கு அருகில் வைத்து, யாழ்ப்பாணம் ஐந்து சந்தி... Read more »

வல்வைப் படுகொலைகளின் 34ம் ஆண்டு நினைவேந்தல்…! (VIDEO)

1989 ம் ஆண்டு ஓகஸ்ட் 2ம் திகதி வல்வெட்டித்துறை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இந்திய இராணுவத்தால் 63 தமிழ் பொதுமக்கள் சுட்டும், வெட்டியும், எரித்தும் கொல்லப்பட்டனர். அவர்களை நினைவுகூரும் நினைவேந்தல் இன்றையதினம் வல்வெட்டித்துறையில் நடைபெற்றது. இதன்போது பொதுச் சுடர் ஏற்றப்பட்டு, மலர் தூவி,... Read more »

புதுக்குடியிருப்பில் மாண்புமிகு மலையகம் நடைபவனி கிளிநொச்சியை அடைந்தது…! (video)

இலங்கை வாழ் மலையக மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில் மலையக மக்களின் உரிமை மற்றும் அவர்களின் மூதாதையர் விட்டு சென்ற சுவடுகள் ஊடாக பயணிப்பதை நோக்காக கொண்டு ஆரம்பிக்கப்பட்ட தலைமன்னார் முதல் மாத்தளைவரை மாண்பு மிகு மலையகம்-200 நடைபவனிக்கு... Read more »

சினோபெக் நிறுவனத்தின் எரிபொருள் தாங்கிய கப்பல் இன்று நாட்டை வந்தடையும்

சீனாவின் சினோபெக் நிறுவனத்தின் எரிபொருளை தாங்கிய இரண்டாம் கப்பல் இன்றைய தினம் நாட்டை வந்தடையும் என வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.தமது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இதனைப் பதிவிட்டுள்ள அவர், சீனாவின் சினோபெக் நிறுவனத்தினால் நாட்டுக்கு முதல் கப்பலில் கொண்டு வரப்பட்ட எரிபொருள்... Read more »

கிளிநொச்சி மகாவித்தியாலய பாடசாலை சமூகத்தின் சுற்றாடல் சமூக பணி

கிளிநொச்சி மகாவித்தியாலய பாடசாலை சமூகத்தின் சுற்றாடல் சமூக பணி இன்று முன்னெடுக்கப்பட்டது. பாடசாலை முதல்வர் ஜெயந்தி தனபாலசிங்கம் தலைமையில் கிளிநொச்சி மகாவித்தியாலய சாரணிய குழுவினால் குறித்த பணி முன்னெடுக்கப்பட்டது. கிளிநொச்சி A9 வீதியில் வீசப்பட்டு நீண்ட காலமாக காணடப்பட்ட உக்காத பொலித்தீன் பொருட்கள் தொடர்பில் பலரும்... Read more »

கொக்குவில் பகுதியில் உருக்குலைந்த நிலையில் முதியவரின் சடலம் மீட்பு!

யாசகம் பெற்றுவந்த முதியவர் ஒருவர் நேற்றிரவு (01) 10 மணியளவில் கொக்குவில் இந்துக் கல்லூரிக்கு அருகாமையில் உள்ள திறந்த அறை ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் சொந்த வீடு இன்றி நீண்ட காலமாக யாசகம் பெற்று வந்த நிலையில் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.... Read more »

குடியேற்ற உத்தியோகத்தரால் ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல்!

முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு பிரதேச செயலக குடியேற்ற உத்தியோகத்தரால் முல்லைத்தீவு மாவட்டத்தை பிரதிநிதித்துவ படுத்தும் ஊடகவியலாளர் ஒருவர் தொலைபேசி ஊடாக அச்சுறுத்தப்பட்டுள்ளார் தனது ஊழல்களை உன்னால் எதுவும் செய்ய முடியாது, தேவையற்ற விதத்தில் தனது விடயங்களில்  தலையிடாதே, என்று அச்சுறுத்தியதாக ஊடகவியலாளரால் முறைப்பாடொன்று... Read more »