கொக்குவில் பகுதியில் உருக்குலைந்த நிலையில் முதியவரின் சடலம் மீட்பு!

யாசகம் பெற்றுவந்த முதியவர் ஒருவர் நேற்றிரவு (01) 10 மணியளவில் கொக்குவில் இந்துக் கல்லூரிக்கு அருகாமையில் உள்ள திறந்த அறை ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவர் சொந்த வீடு இன்றி நீண்ட காலமாக யாசகம் பெற்று வந்த நிலையில் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த மரணம் குறித்து மரண விசாரணை மேற்கொண்ட திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார், உடற்கூற்று பரிசோதனைக்காக சடலத்தை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளார்.
உயிரிழந்தவர் கொக்குவில் பகுதியைச் சேர்ந்த முத்துத்துரை சித்திராந்தன் (வயது 70) என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரது உறவினர்கள் கொழும்பில் வசித்து வருகின்ற நிலையில், இது குறித்து அவர்களுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

Recommended For You

About the Author: Editor Elukainews