சினோபெக் நிறுவனத்தின் எரிபொருள் தாங்கிய கப்பல் இன்று நாட்டை வந்தடையும்

சீனாவின் சினோபெக் நிறுவனத்தின் எரிபொருளை தாங்கிய இரண்டாம் கப்பல் இன்றைய தினம் நாட்டை வந்தடையும் என வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.தமது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இதனைப் பதிவிட்டுள்ள அவர், சீனாவின் சினோபெக் நிறுவனத்தினால் நாட்டுக்கு முதல் கப்பலில் கொண்டு வரப்பட்ட எரிபொருள் தற்போது எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.எரிபொருள் விற்பனையாளர்களுடனான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதன் பின்னர் சீனாவின் சினோபெக் 150 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக மக்களுக்கான எரிபொருள் வழங்கப்படவுள்ளது. அத்துடன் புதிய சில்லரை விற்பனையாளர்கள் நாட்டில் முதலீடு செய்வதால் அந்நிய செலாவணி தேவைகள் குறைவடைவதுடன் எரிபொருள் பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும் எனவும் வலுசக்தி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews