காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை கண்டித்து வைத்திய நிபுணர்கள் சங்கம் பணி புறக்கணிப்பு.. தனியார் வைத்தியசாலைக்கு அலைய வேண்டாம் எனவும் கோரிக்கை.

காலி முகத்திடலில் இடம்பெற்ற ஜனநாயகப் போராட்டத்தின் மீது கட்டவிழ்த்துவிட்ட காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை கண்டித்து இலங்கை வைத்திய நிபுணர்கள் சங்கம் இன்றைய தினம் நாடு தழுவிய பணிப்பகிஷ்தரிப்பை மேற்கொள்ளவுள்ளதாக சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆர் ஞானசேகரன் தெரிவித்தார். அவர் அனுப்பிய ஊடக அறிக்கையில் தெரிவித்ததாவது காலி... Read more »

இலங்கையில் நீடிக்கும் பதற்றம் – அமெரிக்க ராஜாங்க திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பு –

இலங்கையின் நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருவதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு அந்த திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “இலங்கையின் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், அமைதியான போராட்டக்காரர்கள் மற்றும் அப்பாவி மக்கள் மீதான வன்முறைளுக்கு... Read more »

ஊரடங்கு காலை 7:00 மணியுடன் தளர்வு….!

நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் நாளை காலை தளர்த்தப்படவுள்ளது. நாளை காலை 7 மணிக்கு இவ்வாறு ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படவுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ்  இன்று  இரவு 7 மணி முதல் நாளை காலை 7 மணி வரை நாடு... Read more »

மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினரின் வீடும் தீக்கிரை! –

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சியின் வீட்டின் மீதும் பிரதேசவாசிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். தாக்குதலுக்குப் பிறகு நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டிற்கு கலகக்காரர்கள் தீ வைத்ததாக கூறப்படுகிறது. இதேவேளை பல நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் பிரதேசவாசிகளால் தாக்கப்பட்டதுடன் புத்தளம் நாடாளுமன்ற... Read more »

துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் அமரக்கீர்த்தி அத்துக்கோராள எம்.பி உள்ளிட்ட இருவர் உயிரிழப்பு –

நிட்டம்புவ பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அமரக்கீர்த்தி அத்துக்கோரள, அவரது தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரி ஒருவர் ஆகியோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Read more »

பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவின் குருணாகல் அலுவகத்துக்கு தீ வைப்பு…!

பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவின் குருணாகல் அலுவகத்துக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களின் அலுவலகங்கள், வீடுகள், வாகனங்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது. Read more »

நிட்டம்புவ நகரில் துப்பாக்கிச்சூடு!

நிட்டம்புவ நகரில் இன்று பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் மூவர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். வாகனமொன்றில் வந்த சிலர் இவ்வாறு, நகரின் நிட்டம்புவ நகர மத்தியில் ஆர்ப்பாட்டத்தில ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. சம்பவத்தில் காயமடைந்த மூவரும் வத்துப்பிட்டிவல வைத்தியசாலையில்... Read more »

மொரட்டுவ நகர சபை மேயர் வீட்டிற்கு தீ வைப்பு!

மொரட்டுவ நகர சபை மேயர் சமன்லால் பெர்ணான்டோவின் வீட்டிற்கு சிலர் தீ வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மொரட்டுவ, வில்லோராவத்த பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கே இவ்வாறு தீ வைக்கப்பட்டுள்ளது. எனினும் தற்போது அப்பகுதியில் நிலமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Read more »

அமைச்சரவை அமைச்சர்கள் அனைவரும் இராஜினாமா.

அமைச்சரவை அமைச்சர்கள் அனைவரும் இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விலகியை அடுத்து அமைச்சரவையின் அதிகாரங்கள் இழக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. Read more »

இதுவரை 140 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி.!

காலி முகத்திடலில் ஏற்பட்ட கலவரம் காரணமாக காயமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் இதுவரையில் சுமார் 140 பேர் வரையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, நாடு முழுவதும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மறு அறிவித்தல் வரையில்  இவ்வாறு... Read more »