ஊரடங்கு காலை 7:00 மணியுடன் தளர்வு….!

நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் நாளை காலை தளர்த்தப்படவுள்ளது.

நாளை காலை 7 மணிக்கு இவ்வாறு ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படவுள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ்  இன்று  இரவு 7 மணி முதல் நாளை காலை 7 மணி வரை நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் இருக்கும்.

இது குறித்து ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

குறித்த காலப்பகுதியில்  பொது வீதிகளில் புகையிரத கடவைகள், பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள் அல்லது  வேறு பொது இடங்கள் மற்றும் கடலோரங்களில் ஒன்று கூடுவதற்கோ அல்லது உலாவுவதற்கோ முழுமையாக தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews