அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பயங்கரவாதத்தை நினைவுபடுத்துகின்றன : க.வி.விக்னேஸ்வரன்.

கொழும்பு காலிமுகத்திடலில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்திய அப்பாவி மக்கள் மீது குண்டர்களை ஏவி தாக்குதல் நடத்திய சம்பவத்துக்கு அரசாங்கமே முழு பொறுப்பையும் ஏற்கவேண்டும் என யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும்... Read more »

வன்முறையின் போது தாக்கப்பட்ட அருட்தந்தையர் மற்றும் ஊடகவியலாளர்.

நேற்றைய தினம் இடம்பெற்ற கலவரத்தை கட்டுப்படுத்த முன்வந்த அருட்தந்தையர்களை மகிந்த ஆதரவாளர்கள் கொடூரமாக தாக்கி அங்கிருந்த கூடாரங்களையும் அடித்து நொறுக்கியுள்ளனர். இதன்போது போது அதனை காணொளியாக பதிவு செய்த எமது லங்காசிறியின் அலுவலக செய்தியாளரை அங்கிருந்த கலகக்காரர்கள் தாக்கியுள்ளனர். இதன்போது ஊடகவியலாளரின் கைத்தொலைபேசிகள் என்பன... Read more »

மகிந்தவின் சகாக்களின் வீடுகள் தீக்கிரை.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து கடந்த ஒரு மாத காலமாக கொழும்பில் மிகவும் அமைதியான முறையில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்நிலையில்,  போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை அரச ஆதரவாளர்கள் தாக்கியதை தொடர்ந்து அமைதியாக இடம்பெற்ற போராட்ட களம் வன்முறை களமாக மாறியது. இதன் விளைவான அரச... Read more »

அலரி மாளிகை பகுதியில் துப்பாக்கிச் சூடு….!

அலரி மாளிகையை மக்கள் முற்றுகையிட்டுள்ள நிலையில், தற்போது அங்கு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   நாடு முழுவதும் வன்முறை வெடித்துள்ள நிலையில், அலரி மாளிகையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அலரி மாளிகையின் கதவுகளை உடைத்துக்கொண்டு மக்கள் பிரவேசிக்க முற்பட்டுள்ள நிலையில், அந்த பகுதியில்... Read more »

கொழும்புக்கு அழைத்து வரப்பட்ட சிறை கைதிகள் – வன்முறையின் பின்னணியில் வெளியாகியுள்ள திடுக்கிடும் தகவல்.

அரசாங்கத்திற்கு எதிராக அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்டு வந்த போராட்டம இன்று வன்முறையாக மாறியுள்ளது. கடந்த ஒரு மாத காலமாக அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் மிகவும் அமைதியான முறையில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், குறித்த போராட்ட களத்தில் நேற்று குண்டர்கள் களமிறங்கி போராட்டகாரர்கள் மீது கொடூரமாக... Read more »

ஊரடங்கிற்கு மத்தியிலும் முழுமையாக முடக்கப்படும் நாடு…!

நாட்டில் சுமார் 1000 தொழிற்சங்கங்கள் இன்று முதல் பணிப்புறக்கணிப்பு ஈடுபடவுள்ளன. இது தொடர்பில் நேற்றைய தினம் அறிவிப்பு வெளியாகியிருந்தது நள்ளிரவு 12 மணிமுதல் கல்வி, மருத்துவம், போக்குவரத்து, தபால் உள்ளிட்ட பல்வேறு துறைசார்ந்த 1000 தொழிற்சங்கங்களே பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை நாடளாவிய ரீதியிலுள்ள... Read more »

கொழும்பு வன்முறை – பொலிஸார் உள்ளிட்ட இருவர் பலி.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற வன்முறையின் போது பொலிஸார் உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் போது 218 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை தகவல் Read more »

பரபரப்புக்கு மத்தியில் அலரி மாளிகையிலிருந்து தப்பிய மகிந்த.

நீண்ட போராட்டத்திற்கு மத்தியில் அலரி மாளிகையில் இருந்து முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ வெளியேறிச் சென்றுள்ளார். நேற்று இரவு தொடக்கம் இன்று அதிகாலை வரை அலரி மாளிகையை சுற்றியிருந்த ஆர்ப்பாட்டக்காரர்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை பலத்த இராணுவ... Read more »

மகிந்த ராஜபக்ச பதவி விலகல் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியானது.

மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியை இராஜினாமா செய்வது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. Read more »

ஜனாதிபதிக்கும் சமயத் தலைவர்கள் குழுவிற்கும் இன்று காலை இடம் பெற்ற விசேட சந்திப்பு…..!

ஜனாதிபதிக்கும் சமயத் தலைவர்கள் குழுவிற்கும் இடையில் இன்று காலை விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. அத்துடன், தற்போதைய நிலைமைகள் தொடர்பில் கட்சித் தலைவர்களின் விசேட கூட்டமொன்று இன்று காலை இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.மத தலைவர்கள் பல ஆலோசனைகளை வழங்கினர். கட்சி சார்பற்ற பிரதமர் நியமனம், 15... Read more »