நேற்றைய தினம் இடம்பெற்ற கலவரத்தை கட்டுப்படுத்த முன்வந்த அருட்தந்தையர்களை மகிந்த ஆதரவாளர்கள் கொடூரமாக தாக்கி அங்கிருந்த கூடாரங்களையும் அடித்து நொறுக்கியுள்ளனர்.
இதன்போது போது அதனை காணொளியாக பதிவு செய்த எமது லங்காசிறியின் அலுவலக செய்தியாளரை அங்கிருந்த கலகக்காரர்கள் தாக்கியுள்ளனர்.
இதன்போது ஊடகவியலாளரின் கைத்தொலைபேசிகள் என்பன பறிக்கப்பட்டதுடன் அவரை தாக்கி அச்சுறுத்தியுள்ளனர்.