அத்தியாவசியமற்ற அரச பணியாளர்கள் கடமைக்கு சமுகமளிக்க வேண்டாம்: பிரதமர்…!

அன்றாடம் அத்தியாவசிய உணவு பொருட்களுக்காக செலவு செய்வதற்கு திறைசேரியில் நிதி இல்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பான விரிவான அறிக்கை அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோது பிரதமர் தெரிவித்தார். அன்றாட நுகர்வுக்குத் தேவையான அத்தியாவசிய உணவுப்... Read more »

சனிக்கிழமையின் பின்னரே பெற்றோல் விநியோகம்!

நாட்டில் எதிர்வரும் சனிக்கிழமை முதல் பெற்றோல் விநியோகிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் அதற்கு தேவையான போக்குவரத்து சேவைகள் வழங்கப்படும் என இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்றும் நாளையும் பெற்றோல் விநியோகிக்கப்படமாட்டாது என்பதால் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் வரிசையில்... Read more »

மூன்று எம்பிக்களிடம் வாக்குமூலம்!

பாராளுமன்ற உறுப்பினர்களான ரோஹித அபேகுணவர்தன, சி.பி ரத்நாயக்க மற்றும் சஞ்சீவ எதிரிமான்ன ஆகியவர்களிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 9 ஆம் திகதி ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் இவ்வாறு வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. Read more »

பாராளுமன்ற உறுப்பினராக ஜகத் சமரவிக்ரம பதவிப்பிரமாணம்….!

கடந்த 09 ஆம் திகதி ஏற்பட்ட கலவரத்தின் போது உயிரிழந்த பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துக்கோரளவின் வெற்றிடத்துக்கு எஸ்.சமரவிக்ரம நியமிக்கப்பட்டுள்ள அவர் சற்றுமுன்னர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அவேர்தன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். Read more »

முன்னறிவிப்பின்றி கடுமையான தொழிற்சங்க நடவடிக்கை: அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை!

சுகாதார ஊழியர்களுக்கு சம்பளம் குறைக்கப்பட்டால் எதிர்வரும் 25 ஆம் திகதிக்கு பின்னர் முன்னறிவிப்பின்றி கடுமையான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே குறித்த சங்கத்தின் ஊடக குழு உறுப்பினர்... Read more »

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு!

கோதுமை மாவின் விலையை 40 ரூபாவால் அதிகரிக்க பிரீமா நிறுவனம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதே வேளை பாணின் விலையும் அதிகரித்துள்ளது. Read more »

தடைப்பட்டது கொழும்பு – கண்டி வீதியூடான போக்குவரத்து!

கொழும்பு – கண்டி வீதியின் போக்குவரத்து கன்னெருவ சந்தியில் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எரிபொருள் கோரி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் இவ்வாறு போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Read more »

கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலையில் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர் கௌரவிப்பு…!

கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலையில் 2021 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது தேசிய ரீதியில் தமிழ் மொழியில் முதலாம் இடத்தினை வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலையின் மாணவர் பெற்றிருந்த நிலையில் கொக்குவில்... Read more »

யாழ் நகரிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பு!

யாழ்ப்ப்பாண நகரிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளுக்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தமையை அவதானிக்க முடிந்தது. எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டாம் என அரசாங்கம் அறிவித்திருந்த போதிலும் இன்று காலை முதல் எரிபொருட்களை பெற்றுக்கொள்வதற்காக மக்கள் கொள்கலன்களுடன் காத்திருந்தனர். Read more »

முல்லைத்தீவில் கிணற்றுக்குள் தொங்கிய நிலையில் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு!

முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு பிரதேசத்திற்குட்பட்ட பாண்டியன்குளம் பகுதியில் கிணற்றுக்குள் தொங்கிய நிலையில், குடும்பஸ்தர் ஒருவர் இன்று அதிகாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அதே இடத்தை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 65 வயதுடைய ஐயாத்துரை துரைரட்ணசிங்கம் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த குடும்பஸ்தர்... Read more »