தொடர் தொழிற்சங்க நடவடிக்கையில் குதித்த சுங்க அதிகாரிகள்

மேலதிக நேர சேவைகளில் இருந்து விலகுவதற்கான தொழிற்சங்க நடவடிக்கை இன்று (18) 4ஆவது நாளாகவும் தொடரும் என சுங்க அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அதிகாரிகள் தரப்பில் இருந்து தீர்வு கிடைக்காமையால் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக அதன் தலைவர் அமில சஞ்சீவ தெரிவித்தார். இதேவேளை,... Read more »

கோப் குழுவில் இருந்து விலகினார் எரான் எம்.பி.

பொது விவகாரங்களுக்கான குழு அல்லது கோப் குழுவின் உறுப்புரிமையில் இருந்து விலகவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார். இன்று (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், சபாநாயகரிடம் தாம் இதற்கான கடிதத்தை கையளித்ததாகக் குறிப்பிட்டுள்ளார். நிலையிற் கட்டளையில் மாற்றங்களை... Read more »

புற்றுநோய் சிகிச்சை பிரிவின் சேவைகள் ஸ்தம்பிதம்!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவில் நோயாளர்களுக்கு வழங்கப்படும் மேலதிக சேவைகள் இன்று முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அரச கதிரியல் தொழிநுட்பவியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவில் கடமை புரியும் கதிர் வீச்சு சிகிச்சையாளர்களுக்கு வழங்க வேண்டிய மேலதிக... Read more »

தூக்கில் தொங்கியவர் வைத்தியசாலையில் உயிரிழப்பு – இருபாலையில் சம்பவம்!

இன்றையதினம் தவறான முடிவெடுத்து தூக்கில் தொங்கியவர், வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டவேளை உயிரிழந்துள்ளார். இதன்போது இருபாலை கிழக்கு பகுதியைச் சேர்ந்த சிற்றம்பலம் பாஸ்கரன் (வயது 61) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் வீட்டுக்கு முன்னால் உள்ள வேப்பமரத்தில் இன்றையதினம் தூக்கில்... Read more »

சமுதாய பாதுகாப்பு குழுக்களிற்கான விசேட கலந்துரையாடல் இன்று பொலிஸ் மா அதிபர் தலைமையில் நடைபெற்றது

சமுதாய பாதுகாப்பு குழுக்களிற்கான விசேட கலந்துரையாடல் இன்று பொலிஸ் மா அதிபர் தலைமையில் இடம்பெற்றது. கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களை உள்ளடக்கிய குறித்த கலந்துரையாடல் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் கிளிநொச்சியில் உள்ள தனியார் விருந்தகம் ஒன்றில் இடம்பெற்றது, இக்கலந்துரையாடலில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் திலான்... Read more »

யாழ்ப்பாணம் – சாட்டி கடலுக்குள் நீராடச் சென்ற சிறுமியொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் – சாட்டி கடலுக்குள் நீராடச் சென்ற சிறுமியொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். நாவாந்துறை பகுதியைச் சேர்ந்த அவந்திகா விஜயகாந்த் என்ற 11 வயது சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த சிறுமி நேற்றுமாலை அவரது நண்பியுடன் நீராடிக்கொண்டு இருக்கும்போது நீரில் அடித்து செல்லப்பட்டார்.... Read more »

எல்லை தாண்டி வந்து மீன்பிடித்த குற்றச்சாட்டின் கீழ் 21 இந்திய மீனவர்கள் கைது!

இன்று அதிகாலை, எல்லை தாண்டி வந்து இலங்கை கடற்பரப்பினுள் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 21 மீனவர்கள் 2 படகுகளுடன் கைது செய்யப்பட்டனர். நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் நீரியல்வள... Read more »

மருதங்கேணி கடலில் காணாமல் போனவர் சடலமாக மீட்பு

வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் 16.03.2024 சனிக் கிழமை அன்று கடலுக்கு சென்று காணாமல் போன மீனவர் இன்று 17.03.2024 சடலமாக மீட்கப்பட்டார். மீன்பிடிப்பதற்காக தெப்பம் மூலம் கடலுக்கு சென்றவர் காணாமல் போன நிலையில் இரண்டு நாட்களாக கடற்படையினர் மீனவர்களின் உதவியுடன் தேடி வந்தனர். இந்நிலையில்... Read more »

அரசியல்வாதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு விரைவில் நீக்கப்படும்! அமைச்சர் அதிரடி

பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லாவிட்டாலும் உயரதிகாரிகள் வழங்கப்பட்டுள்ள அரசியல்வாதிகள் மற்றும் பல தரப்பட்ட உயரதிகாரிகள் தொடர்பில் விசாரணை நடத்தி அறிக்கைகளை உடனடியாக சமர்ப்பிக்குமாறு பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் கடந்த வாரம் அரச புலனாய்வு சேவைக்கு அறிவித்துள்ளார். இது தொடர்பில் எமது விசாரனையில் கருத்து... Read more »

பாகிஸ்தானில் இராணுவ நிலையின் மீது தற்கொலைக்குண்டு தாக்குதல்.!

வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள பரந்து விரிந்த ராணுவ நிலையின் மீது தற்கொலை குண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. தற்கொலை குண்டுதாரி  வெடிபொருள் நிரப்பிய டிரக்கை மோதியதாக ராணுவம் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது ஏழு வீரர்கள் கொல்லப்பட்டதாக அந்நாட்டு... Read more »