கோப் குழுவில் இருந்து விலகினார் எரான் எம்.பி.

பொது விவகாரங்களுக்கான குழு அல்லது கோப் குழுவின் உறுப்புரிமையில் இருந்து விலகவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார்.

இன்று (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், சபாநாயகரிடம் தாம் இதற்கான கடிதத்தை கையளித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

நிலையிற் கட்டளையில் மாற்றங்களை ஏற்படுத்த தீர்மானித்தோம். ஆனால் அரசாங்கம் விரும்பவில்லை.

இதுவரை சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளில் எந்த முன்னேற்றங்களும் இல்லை. கோப் பேசும் இடமாக இருந்து வருகிறதே ஒழிய நடவடிக்கைகள் எடுக்கும் எந்த நடைமுறையும் அதில் இல்லை.

இந்த அரசாங்கம் கோப்பை பயன்படுத்தி மோசடிகள், ஊழல் திருட்டுகளை மூடி மறைக்கும் செயற்பாடுகளையே முன்னெடுத்து வருகிறது. என அவர் மேலும் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews