அரசியல்வாதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு விரைவில் நீக்கப்படும்! அமைச்சர் அதிரடி

பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லாவிட்டாலும் உயரதிகாரிகள் வழங்கப்பட்டுள்ள அரசியல்வாதிகள் மற்றும் பல தரப்பட்ட உயரதிகாரிகள் தொடர்பில் விசாரணை நடத்தி அறிக்கைகளை உடனடியாக சமர்ப்பிக்குமாறு பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் கடந்த வாரம் அரச புலனாய்வு சேவைக்கு அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் எமது விசாரனையில் கருத்து தெரிவித்த பாதுகாப்பு அமைச்சர்,

அரசியல்வாதிகளுக்கும் ஏனையவர்களுக்கும் தேவையற்ற வகையில் வழங்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் விரைவில் நீக்கப்படுவார்கள்.

இதன்படி சுமார் ஐயாயிரம் பொலிஸ் உத்தியோகத்தர்கள் தமது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லாத அரசியல் பிரமுகர்களுக்கு இவ்வாறு சேவையில் ஈடுபடுத்தப்படுவதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews