பாகிஸ்தானில் இராணுவ நிலையின் மீது தற்கொலைக்குண்டு தாக்குதல்.!

வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள பரந்து விரிந்த ராணுவ நிலையின் மீது தற்கொலை குண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.

தற்கொலை குண்டுதாரி  வெடிபொருள் நிரப்பிய டிரக்கை மோதியதாக ராணுவம் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது ஏழு வீரர்கள் கொல்லப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆப்கானிஸ்தானின் எல்லையில் உள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள வடக்கு வஜிரிஸ்தானில் நடந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் குறித்த தற்கொலைக் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews