அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் அமைந்துள்ள ஆலயங்களில் வழிபாடுகளை மேற்கொள்ள அனுமதி…!

வலி வடக்கில் அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிக்கப்படவுள்ளதாக வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்  இன்றையதினம்(27)  யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது கடந்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றம்... Read more »

கேப்பாபிலவு காணி விடுவிப்பு தொடர்பில் இராணுவ உயர் அதிகாரியுடனான சந்திப்பில் ஏமாற்றமடைந்த மக்கள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாபிலவு மக்கள் தங்கள் காணிகளை விடுவிக்க கோரி இராணுவ படைத் தலைமையகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பினை மேற்கொண்டுள்ள நிலையில் இராணுவ உயர் அதிகாரியுடனான சந்திப்பு ஏமாற்றத்தில் முடிந்துள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர். கேப்பாபிலவு மக்கள் அவர்களுக்கு சொந்தமான 56 குடும்பங்களின் 59.5 ஏக்கர் காணியினை... Read more »

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு சென்ற குடும்பஸ்தரை காணவில்லை!

கடந்த 20.10.2023 அன்று வீட்டில் இருந்து புறப்பட்டுச் சென்ற குடும்பஸ்தரை காணவில்லை என காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணம் – கீரிமலை வீதி, நல்லிணக்கபுரம் என்ற முகவரியில் வசித்து வந்த தேவராசா சூசைதாசன் (வயது... Read more »

அராலி சரஸ்வதி இந்துக் கல்லூரியின் இல்ல மெய்வல்லுனர் போட்டி!

அராலி சரஸ்வதி இந்துக் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டியானது நேற்றையதினம் பாடசாலையின் மைதானத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வின் ஆரம்பத்தில் விருந்தினர்கள் மேற்கத்தேய இசை வாத்தியங்கள் முழங்க அழைத்து வரப்பட்டனர். அதனைத் தொடர்ந்து மங்கல விளக்கேற்றலுடன் நிகழ்வு ஆரம்பகியது. மாணவர்களின் அணிநடை நிகழ்வு,... Read more »

சட்டத்திற்கும் மனித உரிமைக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் நடமாடும் சேவை!

சட்டத்திற்கும் மனித உரிமைக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் நேற்றையதினம் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் நடமாடும் சேவை முகாம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த நடமாடும் சேவையில் காலம் கடந்த இறப்பு, காலம் கடந்த பிறப்பு, திருமணப்பதிவு அடையாள அட்டைக்கான விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளல், பொலிஸ் நற்சான்று பத்திரம்... Read more »

இலங்கையில் பிற்பகல் 2.00 மணிக்கு பின் பலத்த மழை..!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய மேல், தென், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை... Read more »

தமது அடிப்படை தேவைகளை தெரிவிப்பதற்கான சந்தர்ப்பத்தை பெண்களுக்கு வழங்க வேண்டும். – யாழ் பல்கலைக்கழகத்தில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் தெரிவிப்பு

வடக்கு மாகாணத்தில் மாத்திரமின்றி நாடளாவிய ரீதியில் பெண்கள் நாளாந்தம் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கி வருவதாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். பெண்களுக்கான உரிமைகள் தொடர்பில் குரல் எழுப்ப முன்னர், தமது அடிப்படை தேவைகளை தயக்கமின்றி தெரிவிப்பதற்கும், அதற்கான உதவிகளை பெற்றுக்கொள்வதற்கும் பெண்களுக்கு... Read more »

வடக்கில் குற்றச்செயல்கள் முற்றாகக் கட்டுக்குள்வரும் – அண்மையில் புதிதாகப் பதவியேற்ற பிரதிப் பொலிஸ்மா அதிபர் தெரிவிப்பு

வடக்கு மாகாணத்தில் குற்றச்செயல்கள் முற்றாகக் கட்டுப்படுத்தப்பட்டு, பொதுமக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என்று வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக் சி.ஏ.தனபால தெரிவித்துள்ளார். கடந்த 21ஆம் திகதி வடமாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபராகப் பதவியேற்றிருந்த திலக் சி.ஏ.தனபால,  நேற்று மேலும் தெரிவித்ததாவது, வடக்கு மாகாணத்தின்... Read more »

யாழ்ப்பாணத்தில் யூனியன் வங்கியின் மகளிர் தின நிகழ்வு 

யூனியன் வங்கியினால் மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாண தலைமைக் காரியாலயத்தில்  நிகழ்வுகள் இடம்பெற்றது . பெண்களில் முதலிடுவோம் முன்னேற்றத்தை விரைவுபடுத்துவோம் பெண்களின் பொருளாதாரத்தில் முதலிடுவோம்  என்னும் தொனிப்பொருளில் மகளிர் தின நிகழ்வுகள் இடம்பெற்றது. இன் நிகழ்வில் பெண்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற மற்றும்... Read more »

கீரிமலை ஜனாதிபதி மாளிகை அளவீட்டுப்பணிக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு…!

யாழ். கீரிமலை ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதியில் இன்று(26)  காலை இடம்பெறவிருந்த அளவீட்டுப்பணி மக்களின் பலத்த எதிர்ப்பால் கைவிடப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ். வலி வடக்கு கீரிமலையில் அமைந்துள்ள  ஜனாதிபதி மாளிகை பகுதியை நகர அபிவிருத்தி நடவடிக்கைக்காக சுவீகரிக்கும் அடிப்படையில்... Read more »