நாட்டில் இன்று 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை!

நாட்டின் சில பகுதிகளில் இன்று (29) 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, தென் மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 மில்லிமீற்றர் அளவில் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கிழக்கு, ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்தின் சில இடங்களிலும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், சபரகமுவ, தென் மற்றும் மத்திய மாகாணங்களின் சில இடங்களில் இன்று மாலை அல்லது இரவு வேளைகளில் இடைக்கிடையே இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது

Recommended For You

About the Author: Editor Elukainews