வடமராட்சி ஊடகவியலாளர் சின்னத்துர  தில்லைநாதனுக்கு  ஊடக தூதுவிருது….!

யாழ்ப்பாணம் வடமராட்சியிலிருந்து 50 ஆண்டுகளுக்கு மேல் ஊடகப் பணியாற்றிக்கொண்டிருக்கும்  சின்னத்திரை தில்லைநாதன் அவர்களுக்கு. ஊடக தூது எனும் கௌரவ விருது வழங்கப்படவுள்ளது.

பிஷப் சௌந்தரராஜன் மீடியா சென்டர், பிஷப் ஜஸ்டின் media library and media research centre குறித்த ஊடக தூது எனும் கௌரவ விருதை வழங்கவுள்ளது.

பிஷப் சவுந்தர்ராஜன் மீடியா சென்டர் அண்ட் பிஷப் ஜஸ்டின் media research ஆகியவற்றின் விருது வழங்கல் நிகழ்வு எதிர்வரும் 31ஆம் தேதி யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்விலேயே வடமராட்சி ஊடகவியலாளர் சின்னத்துரை  தில்லைநாதன் அவர்களுக்கு. 50 ஆண்டுகளுக்கு மேல் ஊடகத்துறையில் பணியாற்றியமைக்காக. ஊடகதூது எனும் உயரிய விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளது.

திரு சின்னத்துரை தில்லைநாதன் யாழ்ப்பாணம் வடமராட்சி ஊடாக இல்லத்தின் தலைவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews