தெல்லிப்பழை பொது நூலகத்தில் டிஜிற்றல் மையம் , நூலக நுழைவு  தோரண வாயில் திறப்பு!

தெல்லிப்பழை பொது நூலகமானது  டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டு , நூலக நுழைவு வாயில்  போன்றவற்றின்  அங்குராற்பணம் நேற்று(10) இடம்பெற்றது. நேற்று காலை 9.00 மணியளவில் இடம்பெற்ற நிகழ்வானது வலி வடக்கு பிரதேச செயளாளர் சு.சுதர்ஜன் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்விற்குப்  பிரதம விலுந்தினராக வடமாகாண உள்ளூராட்சி... Read more »

யாழ்ப்பாணத்தின் பிரபல மிருதங்க வித்துவான்  இயற்கை எய்தினார்!

பிரபல மிருதங்க வித்துவான் பிரம்மஸ்ரீ சு.வரதராஜசர்மா நேற்று10)  தெல்லிப்பழையில் இறைவனடி சேர்ந்தார். தெல்லிப்பழையை பிறப்பிடமாகக் கொண்ட இவர் ,1955ம் ஆண்டு மே மாதம் 02 ம் திகதி பிறந்தார்.  இவர் மிருதங்க வித்துவானாக பல்வேறு கலை சார் பணிகளை முன்னெடுத்திருந்தார். குறிப்பாக யுத்த காலம்... Read more »

யாழில் பாடசாலை அபிவிருத்திக்கென வாட மனித உரிமைகள் ஆணைக்குழு அதிரடி நடவடிக்கை…!

யாழ் மாவட்ட பாடசாலை ஒன்றில் பாடசாலை அபிவிருத்திக்கென வாட்ஸ்அப்  குழு மூலம் தொடர்ச்சியாக நிதி சேகரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ். வடமராட்சி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் பாடசாலை அபிவிருத்திக்கு... Read more »

வடமராட்சி வடக்கு பிரதேச செயலகத்தில் புது வருடத்தை முன்னிட்டு விற்பனை சந்தை…!

யாழ்ப்பாணம் வடமராட்சி வடக்கு (பருத்தித்துறை) பிரதேச செயலகத்தில் சமுர்தி அபிமானி வர்த்தக சந்தை   நேற்றும் இன்றும் விற்பனை இடம் பெற்றுள்ளது. வடமராட்சி வடக்கு பிரதேசத்திற்கு உட்பட்ட உள்ளூர் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் உள்ளூர் உற்பத்தி பொருட்கள் விற்பனை அமுர்த்தி அபிமானி விற்பனை சந்தை எனும்... Read more »

யாழ்ப்பாணத்தில் புத்தாண்டை முன்னிட்டு நடாத்தப்பட்ட விளையாட்டு மற்றும் கலை நிகழ்வுகள்!

தமிழ் சிங்களப் புத்தாண்டினை முன்னிட்டு, யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளை தளபதி மேயர் ஜெனரல் M.G.W.W.W.M.C.B விக்கிரமசிங்கவின் எண்ணக்கருவிற்கு அமைவாக போட்டிகள் இன்றையதினம் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றன இனங்களுக்கிடையே நல்லுறவை ஏற்படுத்தும் நோக்கில், தமிழ் மற்றும் சிங்கள போட்டியாளர்கள், இன மத... Read more »

அக்குபஞ்சர் வைத்தியர் டினேஸ் வெளியிட்ட பரபரப்பு குற்றச்சாட்டு…!

ஆங்கில வைத்தியர்களின் தனிப்பட்ட வருமானம் பாதிக்கப்படும் என்பதால் யாழில் அக்குபஞ்சர் சிகிச்சை நிலையத்தை தடை செய்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அக்குபஞ்சர் வைத்தியர் கே. டினேஸ் தெரிவித்துள்ளார்.  யாழ்.ஊடக அமையத்தில் நேற்று முன்தினம் (08) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.   இது தொடர்பில்... Read more »

யாழ்ப்பாணம் – கொட்டடி நமசிவாய வித்தியாலயத்தில் திறன் வகுப்பறை திறந்துவைப்பு!

யாழ்ப்பாணம் – கொட்டடி நமசிவாய வித்தியாலயத்தில் திறன் வகுப்பறை திறந்துவைக்கப்பட்டுள்ளது. “சிவனருள்” நிறுவனத்தின் நிதி அனுசரணையில் “ஐயம் இட்டு உண்” அமைப்பின் ஏற்ப்பாட்டில் அதிபர் சி.தவராசா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ்ப்பாணம் வலயக்கல்விப் பணிப்பாளர் பொ.ரவிச்சந்திரன், சிவனருள் இல்லப் பொறுப்பாளர் செ. செல்வரஞ்சன், ஐயம்... Read more »

யாழில் நிர்வாணமாக மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்

யாழ்ப்பாணத்தில் மானிப்பாய் காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் வயோதிப பெண்ணொருவர் ஆடைகளற்ற நிலையில் நிர்வாணமாக சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 63 வயதுடைய சாந்தினி எனும் பெண்ணே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பிள்ளைகள் மற்றும் கணவரை பிரிந்து தனியாக வீட்டில் வசித்து வந்ததாகவும், நேற்றைய தினம்(9) வீட்டில் சடலமாக காணப்பட்டதை... Read more »

சுவிஸில் இருந்து யாழ்ப்பாணம் வந்தவர் குளியலறையில் விழுந்து உயிரிழப்பு!

சுவிட்சர்லாந்தில் இருந்து நேற்றையதினம் யாழ்ப்பாணம் வந்த ஒருவர் குளியலறையில் விழுந்து உயிரிழந்துள்ளார். பாலசிங்கம் உதயகுமார் (வயது 55) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் நேற்றையதினம் சுவிஸில் இருந்து நவாலி தெற்கு, மானிப்பாய் பகுதியில் உள்ள தாயாரின் வீட்டுக்கு... Read more »

காதலி உயிரிழந்து 50வது நாளில் காதலனும் உயிர்மாய்ப்பு – யாழ்ப்பாணத்தில் துயரம்!

காதலி ஒருவர் தூக்கிட்டு இறந்து 50வது நாளான இன்றையதினம் காதலனும் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவமானது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சிங்காவத்தை, துர்க்காபுரம், தெல்லிப்பழை பகுதியைச் சேர்ந்த கதிர்காமலிங்கம் கோபிசன் (வயது 20) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,... Read more »