மாணவர்களிடம் வாட்ஸப்  மூலம் நிதி சேகரிப்பு -அதிபரும் உடந்தை

யாழ்ப்பாணம் வடமராட்சி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் பாடசாலை அபிவிருத்திக்கு என வாட்ஸ் அப் குறூப் உருவாக்கப்பட்டு தொடர்ச்சியாக நிதி சேகரிக்கப்பட்டமை தெரிய வந்துள்ளது. குறித்த விடயம் தொடர்பில் தெரிய வருவது, குறித்த பாடசாலையின் அதிபரின் தூண்டுதலின் பேரில் ஒவ்வொரு வகுப்பாக வாட்ஸப் குழு... Read more »

பொது வேட்பாளரை நிறுத்தி வாக்குகளை சிதறடிப்பது தமிழரது அரசியலுரிமை பிரச்சினைகளுக்கான தீர்வுகளை மேலும் தாமதமாக்கும் – ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளர் சிறீரங்கேஸ்வரன் சுட்டிக்காட்டு!

நாட்டின் ஜனாதிபதியாக ஒருவர் தெரிவான பின்னர், அவரிடம் சென்று தமிழ் மக்களுக்கான தேவைகளையோ, அன்றி அவர்கள் எதிர்கொள்ளும் அரசியல் பிரச்சினைகள் தொடர்பிலோ  பேசி, தீர்வுகளை பெற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலையை உருவாக்குவதற்கே வரவுள்ள ஜனாதிபதி தேர்தலில், தமிழ் மக்கள் தரப்பில் இருந்து பொது வேட்பாளரை நிறுத்தும்... Read more »

சுமந்திரனை அநுர அழைக்கவில்லை, அழையா விருந்தாளியாக வந்தார் – சந்திரசேகரன்

யாழ்ப்பாணத்தில் கடந்த வாரம் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தி மாநாட்டில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரனுக்கு தனிப்பட்ட அழைப்பை எமது கட்சி விடுக்கவில்லை என மக்கள்  விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.... Read more »

யாழ்ப்பாணத்தில் தென்பட்ட சூரிய கிரகணம்…!

யாழ்ப்பாணத்தில் நேற்றையதினம்(08)  சூரிய கிரகணகத்தை பார்க்க கூடியதாக இருந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வடக்கு அமெரிக்காவை நேற்று கடந்து சென்ற பூரண சூரிய கிரகணத்தை மில்லியன் கணக்கான மக்கள் கண்டு களித்துள்ளனர். பூமிக்கும் சூரியனுக்கு நடுவிலான பாதையில் சந்திரன் பயணித்து, பூமியின்... Read more »

யாழில் புற்றுநோயால் ஒரு வருடத்தில் -776 பேர் பாதிப்பு

யாழ் மாவட்டத்தில் கடந்த வருடம் 2023 ஆம் ஆண்டு மட்டும் 776 பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் 71 பேர் இறந்ததாக யாழ்ப்பாண வைத்திய சாலையில் பதில் பணிப்பாளர் வைத்திய கலாநிதி யமுனானந்தா தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் யாழ் மாவட்டத்தில் புற்றுநோயின் தாக்கம்... Read more »

யாழில் பாடசாலை மாணவர்களுக்கு காசநோய் ..!!

யாழில்  பிரபல ஆண்கள் பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவர்கள் சிலருக்கு காசநோய் கண்டறியப்பட்ட  நிலையில் துறை சார்ந்த வைத்தியர்களால் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவது,, குறித்த ஆண்கள் பாடசாலையில் ஒரு வகுப்பில் கல்விபயிலும் மாணவனுக்கு உடல்... Read more »

இன்றைய இராசி பலன் 09.04.2024

*╔┈┈┅◉★◆☆•𓃠︎•☆◆★◉┅┈┈╗* *🌴🌹🌴🙏🔔 ௐ 🔔🙏🌴🌹🌴* *ஶ்ரீ பாகம்பிரியாள் அம்மன்* *🌴🪷தாயே 🐍 போற்றி🪷🌴* *🌻🤘❀••┈┈•🛕•┈┈••❀🤘🌻* *_꧁‌. 🌈 பங்குனி: 27 🇮🇳꧂_* *_🌼 செவ்வாய் -கிழமை_ 🦜* *_📆  09 – 04- 2024 🦚_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி:... Read more »

52ஆவது இராணுவ படையணியின் வெற்றிக் கிண்ணம் வடமராட்சி அணி வசம்

2024 ஆம் ஆண்டின் தமிழ்-சிங்கள புத்தாண்டை முன்னிட்டு இலங்கை இராணுவத்தின் 52ஆவது படைப்பிரிவின் உதைபந்தாட்ட வெற்றிக் கிண்ண இறுதி போட்டி நேற்று 07.04.2024 வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு சென்மேரிஸ் மைதானத்தில் இடம்பெற்றது. மாலை 06.00 இலங்கை இராணுவத்தின் யாழ் மாவட்ட கட்டளை தளபதி MAJ... Read more »

ஊடக சந்திப்பு! சி.ஆ.ஜோதிலிங்கம், அரசியல் ஆய்வாளர், சட்டத்தரணி, சமூக விஞ்ஞான ஆய்வு மையம்.

ஊடக சந்திப்பு! சி.ஆ.ஜோதிலிங்கம், அரசியல் ஆய்வாளர், சட்டத்தரணி, சமூக விஞ்ஞான ஆய்வு மையம். விடயம் – இலங்கை, இந்தியா இடையேயான கச்சதீவு விவகாரம், இரு நாட்டு தமிழ் உறவுகளையும் பலிக்கடவாக்கும் மத்திய அரசுகள்.  ப.ஜா.க அரசு காங்கிரசையும், தி.மு.கா வையும் வசைபாடி தேவையற்ற பிரசினையை... Read more »

முச்சக்கர வண்டியைத் திருடியவர் சைக்கிளில் தப்பியோட்டம்!

யாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டியைத்  திருடி சென்றவரைப் பொலிஸார்  கைதுசெய்ய முற்பட்ட வேளை, சந்தேகநபர் வீதியில் சென்ற  மாணவனின் துவிச்சக்கர வண்டியை பறித்து, அதன் மூலம் தப்பி சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நபரொருவர் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அருகில் தனது முச்சக்கர வண்டியை நிறுத்தி விட்டு,... Read more »