வாகனங்களுக்கான எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிப்பு!

வாகனங்களுக்காக ஒரு வாரத்திற்கு வழங்கப்படும் எரிபொருள் ஒதுக்கீடு இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டிக்கான எரிபொருள் ஒதுக்கீடு 14 லீற்றராக அதிகரிக்கப்பட்டுள்ளதாக, அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். பதிவு செய்யப்பட்ட முச்சக்கரவண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீடு 22... Read more »

புலமைப்பரிசில் பரீட்சையின் மீள் திருத்தப் பெறுபேறுகள் வெளியாகின

2022ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் மீள் திருத்தப் பெறுபேறுகள் வெளியாகியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, டபிள்யு டபிள்யு டபிள்யு டொட் டி ஒ ஈ என் ஈ ரி எஸ் டொட் எல்கே மற்றும் டபிள்யு டபிள்யு டபிள்யு டொட்... Read more »

கிளிநொச்சி விபத்தில் இளம் குடும்பஸ்தர் பலி..!

கிளிநொச்சியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் பலியாகியுள்ளார். குறித்த விபத்து நேற்று மாலை 4.00 மணியலவில் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சியிலிருந்து தர்மபுரம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும், புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த கப் ரக வாகனமும் நேருக்கு நேர்... Read more »

பெருந்தொகை போதைப்பொருளுடன் சிக்கிய பெண்!

கொழும்பு, கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹெனமுல்ல பகுதியில் போதைப்பொருள் வைத்திருந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துரிகிரிய பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலுக்கமைய நேற்று சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் 50 கிராம் 610 மில்லிகிராம் ஹெரோயின், 101 கிராம் 100... Read more »

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 53வது கூட்டத்தொடர் ஜூனில் ஆரம்பம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 53வது கூட்டத்தொடர் எதிர்வரும் ஜூன் 19ஆம் திகதி ஆரம்பமாகிறது. எனினும், இந்தமுறை அமர்வில் இலங்கைக்கு அழுத்தம் குறைவாகவே இருக்கும் என நம்பப்படுகிறது. நிகழ்ச்சி நிரல்களின்படி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் வோல்கர் டர்க், 19ஆம் திகதி... Read more »

மகாஜனா கல்லுாரி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைதான ஆசிரியருக்கு விளக்கமறியல்!

யாழ்.மகாஜனா கல்லுாரி ஆசிரியரால் மாணவர்கள் 3 பேர் மூர்க்கத்தனமாக தாக்கப்பட்ட ம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியரை 4 நாட்கள் விளக்கமறியலில் வைக்க மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, கடந்த வெள்ளிக்கிழமை பாடசாலையில் மூன்று மாணவர்களை திடீரென... Read more »

உறவினரின் மரண செய்தியை சொல்ல சென்ற முதியவர் கார் மோதி உயிரிழப்பு!

உறவினர் ஒருவரின் மரண செய்தியை மற்றொரு உறவினருக்கு சொல்ல சென்றிருந்த முதியவர் ஒருவர் கார் மோதி உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் நுணாவில் பகுதியை சேர்ந்த கந்தசாமி கமலநாதன் (வயது 74) என்பவரே உயிரிழந்துள்ளார்.  சாவகச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த தனது உறவினரை சனிக்கிழமை (27) பார்வையிட... Read more »

பொலிஸ் காவலரணை சேதப்படுத்திய இனந்தெரியாத நபர்கள்.. |

யாழ்.பண்ணை நாக பூசணி அம்மன் சிலைக்கு அருகாமையில் அமைக்கப்பட்ட தற்காலிக பொலிஸ் காவலரன்  நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு இனம் தெரியாத நபர்களால் உடைக்கப்பட்டுள்ளது. பண்ணை நாக பூசணி அம்மன் சிலை வைக்கப்பட்டமை தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை இடம்பெற்றுவந்த நிலையில் குறித்த சிலையின் ... Read more »

பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் மீது சரமாரி கத்திக்குத்து!

கத்திக் குத்திக்கு இலக்காகி படுகாயமடைந்த பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று வெயங்கொட, கும்பலொலுவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. பொலிஸ் இசைக்குழுவில் பணிபுரியும் மீரிகம இருபது ஏக்கர் பிரதேசத்தைச் சேர்ந்த பெண் கான்ஸ்டபிளே நபரொருவரின் தாக்குதலுக்கு இலக்காகினார். பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் தலை... Read more »

அகில இலங்கை பொது மீனவர் சங்க சம்மேளனத்தின் உறுப்பினர்களுக்கும் யாழ். மீனவர்களுக்குமிடையே சந்திப்பு

அகில இலங்கை பொது மீனவர் சங்க சம்மேளனத்தின் உறுப்பினர்களுக்கும் யாழ் மாவட்டத்தின் அம்பாள் கடற்றொழிலாளர் சங்க உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று யாழ்ப்பாணத்தில் அம்பாள் கடற்றொழிலாளர் சங்க மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் அகில இலங்கை பொது மீனவர் சங்க சம்மேளனத்தின் தலைவரும்  பாராளுமன்ற முன்னாள்  உறுப்பினருமான... Read more »