பொலிஸ் காவலரணை சேதப்படுத்திய இனந்தெரியாத நபர்கள்.. |

யாழ்.பண்ணை நாக பூசணி அம்மன் சிலைக்கு அருகாமையில் அமைக்கப்பட்ட தற்காலிக பொலிஸ் காவலரன்  நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு இனம் தெரியாத நபர்களால் உடைக்கப்பட்டுள்ளது.

பண்ணை நாக பூசணி அம்மன் சிலை வைக்கப்பட்டமை தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை இடம்பெற்றுவந்த நிலையில் குறித்த சிலையின்  பாதுகாப்புக்காக  தக்காலிகக் கூடாரம் அமைத்து பொலிசார் தங்கியிருந்தனர்.

வழக்கு விசாரணைகள் நிறைவுற்ற நிலையில் பொலிசார் அவ்விடத்தில் இருந்து அகன்றுள்ளனர். எனினும் கூடாரம் அகற்றப்படாமல் இருந்த நிலையில் இனம் தெரியாத நபர்களால் சேதமாக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் யாழ்.பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews