பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் மீது சரமாரி கத்திக்குத்து!

கத்திக் குத்திக்கு இலக்காகி படுகாயமடைந்த பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் நேற்று வெயங்கொட, கும்பலொலுவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

பொலிஸ் இசைக்குழுவில் பணிபுரியும் மீரிகம இருபது ஏக்கர் பிரதேசத்தைச் சேர்ந்த பெண் கான்ஸ்டபிளே நபரொருவரின் தாக்குதலுக்கு இலக்காகினார்.

பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் தலை மற்றும் கைகளில் பலத்த காயமடைந்த நிலையில்  சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews