சட்டவிரோதமாக காடுகள் அழிப்பு: அரசு அதிகாரிகள் எடுத்த முடிவு.

சட்டவிரோதமாக காடுகள் அழிக்கப்பட்டு கட்டடங்கள் அமைக்கும் வேலைத்திட்டங்கள் இடம்பெற்றதை தொடர்ந்து கிராம சேவையாளர் சம்பவ இடத்திற்கு விரைந்து உடனடியாக கட்டட வேலைகளை நிறுத்தி அங்கிருந்து செல்லுமாறு உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவமானது நேற்று மட்டக்களப்பு – செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட களுவன்கேணி கடற்கரையோரப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.... Read more »

உக்ரைனுக்கு 375 மில்லியன் டொலர் மதிப்பிலான இராணுவ உதவி – பிரித்தானியா அறிவிப்பு.

உக்ரைனுக்கு 375 மில்லியன் டொலர் மதிப்பிலான இராணுவ உதவிகளை வழங்க உள்ளதாக பிரித்தானியா அறிவித்துள்ளது. பிரித்தானிய பிரதரம போரிஸ் ஜோன்சன் இதனை தெரிவித்துள்ளார். காணொளி ஊடாக உக்ரைன் நாடாளுமன்றில் பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா பெப்ரவரி 24ம் திகதி தாக்குதலை... Read more »

உக்ரைன் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

ரஷ்யா குண்டு மழை பொழிவதற்கான ஆபத்து அதிகமாக உள்ளமையினால் பொதுமக்கள் பாதுகாப்பான இடத்தில் இருக்குமாறு கார்கிவ் பிராந்திய ஆளுநர் எச்சரித்துள்ளார். கார்கிவ் ஆளுநர் Oleh Synyehubov சமூக வலைதளத்தில் வெளியிட்ட செய்தியில், கார்கிவ் பிராந்தியத்தில் குண்டு மழை பொழிவதற்கான ஆபத்து மிகவும் அதிகம். முடிந்தவரை... Read more »

புடினின் படைகளை பின்வாங்கச் செய்த உக்ரைன் – பிரித்தானிய பிரதமர் பாராட்டு.

சுதந்திரத்திற்காக போராடும் ஒரு நாட்டை டாங்கிகளாலும் துப்பாக்கிகளாலும் அடக்க முடியாது என்பதை உக்ரேனியர்கள் தங்கள் விடாமுயற்சி மற்றும் தியாகத்தால் நிரூபித்துள்ளனர் என பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். இந்நிலையில், ரஷ்யாவிற்கு எதிரான போரில் உக்ரைன் வெற்றி பெறும் என்று நான் நம்புகிறேன்” என... Read more »

குடிவரவு, குடியகல்வு திணைக்களம் பொதுமக்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

அத்தியாவசியமல்லாத சேவைகளுக்காக இன்று  (4) தமது அலுவலகத்திற்கு வருவதை தவிர்க்குமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. கணனி அமைப்பில் கோளாறு ஏற்பட்டுள்ளதால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒரு நாள் சேவைகளிலும் தாமதம் ஏற்படலாம் என அத்திணைக்களம் தெரிவித்துள்ளது. Read more »

சபாநாயகருக்கு ஏற்பட்டுள்ள கடும் நெருக்கடி – வெளியாகியுள்ள தகவல்.

இன்று நடைபெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் சபாநாயகருக்கு கடும் நெருக்கடி ஏற்படுவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. பிரதி சபாநாயகரை நியமிப்பதா அல்லது தற்போது ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் நடவடிக்கை எடுப்பதா என்பதை சபாநாயகர்... Read more »

முள்ளிவாய்க்காலில் ஒருவர் கிணற்றில் விழுந்து உயிரிழப்பு.

முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் பகுதியில் கடற்றொழிலுக்காக வந்திருந்த இளைஞரொருவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று 03.05.2022 இடம்பெற்றுள்ளது. திருகோணமலையினை சேர்ந்த 37 அகவையுடைய பிரதாப் என்ற இளைஞர் கடற்றொழிலுக்காக முள்ளிவாய்க்காலில் வாடியில் தங்கி நின்று தொழில் செய்துவந்துள்ளார். குறித்த நபருக்கு வலிப்பு... Read more »

உயிர் பயத்தில் மட்டக்களப்பு ஊடகவியலாளர்கள்.

இலங்கையில் வடக்கு,கிழக்கினை பொறுத்தவரையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஊடகவியலாளர்களுக்கு தொடர்ச்சியாக கடும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருவதாக ஊடகவியலாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். சர்வதேச ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு, மட்டக்களப்பு நகரில் உள்ள படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் நினைவுத்தூபியில் மட்டக்களப்பில் ஊடகவியலாளர்களினால் மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டு கவனயீர்ப்பு போராட்டமொன்று நேறு்று... Read more »

அரசாங்கத்திற்கு மேலும் நெருக்கடி – எதிர்க்கட்சியில் அமரத் தயாராகும் முக்கிய நபர்.

ஆளும் கட்சியின் பலமான உறுப்பினர் ஒருவர் இன்று எதிர்க்கட்சியில் அமரத் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. தென்னிலங்கை ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக பல்வேறு செய்திகளை உருவாக்கி வரும் குறித்த உறுப்பினர் மூத்தவராக அறியப்படுகிறார். இந்த உறுப்பினர்... Read more »

ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டுள்ள பௌத்த பிக்குகள்.

கொழும்பு – கோட்டை ஜனாதிபதி மாளிகையை பெருமளவான பிக்குமார் திடீரென சுற்றிவளைத்தமையினால் அமைதியின்மை நிலவியுள்ளது. கொழும்பு – கோட்டை ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் பிரவேசித்த பெருமளவான பௌத்த பிக்குமார்கள் மத்திய வங்கிக்கு முன்பாக உள்ள நுழைவாயிலை திறந்து கோட்டை ஜனாதிபதி மாளிகை பகுதிக்கு பிரவேசிக்க... Read more »