உக்ரைன் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

ரஷ்யா குண்டு மழை பொழிவதற்கான ஆபத்து அதிகமாக உள்ளமையினால் பொதுமக்கள் பாதுகாப்பான இடத்தில் இருக்குமாறு கார்கிவ் பிராந்திய ஆளுநர் எச்சரித்துள்ளார்.

கார்கிவ் ஆளுநர் Oleh Synyehubov சமூக வலைதளத்தில் வெளியிட்ட செய்தியில்,

கார்கிவ் பிராந்தியத்தில் குண்டு மழை பொழிவதற்கான ஆபத்து மிகவும் அதிகம். முடிந்தவரை பாதுகாப்பான இடத்தில் இருங்கள். உங்கள் சொந்த பாதுகாப்பை புறக்கணிக்காதீர்கள், தேவையில்லாமல் தெருவில் இருக்காதீர்கள். உக்ரைன் ஆயுத படைகளின் முயற்சியால் பிராந்தியத்தில் ரஷ்ய துருப்புகள் தாக்குதலை குறைத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை,நேற்றைய தினம் ரஷ்யா கார்கிவ் பிராந்தியத்தில் இரண்டு உக்ரைன் Su-24m விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews