உயிர் பயத்தில் மட்டக்களப்பு ஊடகவியலாளர்கள்.

சர்வதேச ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு, மட்டக்களப்பு நகரில் உள்ள படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் நினைவுத்தூபியில் மட்டக்களப்பில் ஊடகவியலாளர்களினால் மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டு கவனயீர்ப்பு போராட்டமொன்று நேறு்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தை மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம்,மட்டு ஊடக அமையம், கிழக்கு மாகாண ஊடகவியலாளர் தொழிற்சங்கம், கிழக்கு மாகாண தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்ததுடன்,ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக ஊடக ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,

மட்டக்களப்பு மாவட்டத்தில் உண்மைகளை வெளிக்கொண்டு வரும் ஊடகவியலாளர்கள் சில அரசியல்வாதிகளின் பிரதிநிதிகளின் ஊடாக கடும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருவதுடன்,தங்களது குடும்பங்களை பற்றிய தேவையற்ற விமர்சனங்களையும் வெளியிட்டு வருகின்றனர்.

இவ்வாறான செயற்பாடுகள் தொடரும் பட்சத்தில் கடந்த காலங்களை போல ஊடகவியலாளர்களை இழக்கும் நிலையும் ஏற்படலாம் என்றும் தெரிவித்துள்ளார்.  மேலும், ஒரு சில அரசியல் கட்சிகளின் உண்மை தன்மைகளை ஊடகவியலாளர்கள் வெளிக்கொண்டு வரும் பட்சத்தில் சில பக்கச்சார்பானவர்கள் தவறாக ஊடகவியலாளர்களை முத்திரை குத்துகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews