கொழும்பு அலரிமாளிகைக்கு முன்பாக அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. அறிக்கையொன்றை வெளியிட்டே சங்கம் இவ்வாறு தெரிவித்துள்ளது. Read more »
அரசாங்கத்தை வீட்டுக்கு செல்லுமாறு வலியுறுத்தி கோட்டா கோ கமவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் தரப்பினருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பாரிய ஆர்ப்பாட்டப் பேரணிகள் கொழும்பு காலிமுகத்திடலை நோக்கி வந்துக்கொண்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர்களை தடுப்பதற்கான முயற்சியில் பாதுகாப்பு தரப்பினரும் முயற்சித்த போதிலும் அது பலனளிக்கவில்லை. Read more »
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவியை இராஜினாமா செய்து அதற்கான கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ளதாக அறிய முடிகின்றது. இந்தக் கடிதம் சற்றுமுன்னர் அனுப்பப்பட்டதாக அறியமுடிந்தது. Read more »
யாழ்.கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற 4 டிப்பர் வாகனங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். மணல் வியாபாராத்திற்காக வெளியிடங்களில் இருந்து இந்த மணல் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். இந்நிலையில் 4 டிப்பர் வாகனங்களையும் கைப்பற்றியுள்ள பொலிஸார் 3 சாரதிகளையும் கைது செய்திருக்கின்றனர்.... Read more »
யாழ்.அரியாலை கிழக்கு – பூம்புகார் கடலில் நண்பர்களுடன் குளிக்க சென்றிருந்த இளைஞர் ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று காலை இடம்பெற்றிருக்கின்றது. சம்பவத்தில் ஞானகாந்தன் ஜெயமதன் (வயது36) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார். இதேவேளை நேற்றய தினம் அரியாலையை சேர்ந்த 46 வயதான... Read more »
யாழ்.வல்வெட்டித்துறையை பொலிஸ் நிலையத்தில் மனைவி கொடுத்த முறைப்பாட்டின் அடிப்படையில் கணவன் மற்றும் மகன் ஆகியோர் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, வீட்டில் கணவனால் தகராறு ஏற்படுவதாக மனைவி வல்வெட்டித்துறை பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். குறித்த முறைப்பாட்டின் அடிப்படையில்... Read more »
10000 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் யாழ்.கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய 3 பொலிஸ் உத்தியோகஸ்த்தர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டிருக்கின்றது. கல்வியங்காடு பகுதியில் டிப்பர் ஒன்றினை மறித்து 10000 ரூபா பணம் பெற்றமை தொடர்பில் பாதிக்கப்பட்ட நபர் யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த லியனகே... Read more »
அவசரகால தடைச் சட்டம் என்பது இன்று தமிழர்கள் பல்லாண்டுகளாக அனுபவித்த துன்பங்களை இப்போது சிங்கள மக்கள் அனுபவிக்க தலைப்பட்டிருக்கிறார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்துள்ளார். நேற்று முன் தினம் கொற்றாவத்தை றேஞ்சஸ் விளையாட்டு கழகம் நடாத்திய உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியில் பிரதம விருந்தினராக ... Read more »
பா.இரகுவரன் எழுதிய தும்பளை மேற்கு சந்திரப் பரமானந்தர் வம்சம், சித்த ஆயர்வேத வைத்தியம் சோதிடம், வானியல் பரம்பரையினர் எனும் நூல் வெளியீட்டு விழா பருத்தித்துறை புலோலி வடக்கு ஞான சம்மந்தர் கலைமன்ற அரங்கில் தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை பொறியியலாளர் இ.பாலேந்திரா தலமையில்... Read more »
கிளி/சோறன்பற்று கணேசா வித்தியாலயத்தின் பாவனையில் நூறு வருடங்களாக இருந்த விளையாட்டு மைதானத்தை தனியார் ஒருவருக்கு விற்பனை செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் புதுக்காட்டுச் சந்தி- தாழையடி வீதியை மறித்து நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். கணேசா வித்தியாலயத்திற்கு அருகாமையில் உள்ள தனியார் காணியினை பாடசாலை... Read more »