யாழ்.கோப்பாய் பொலிஸ் பிரிவில் பொலிஸார் அதிரடி 4 டிப்பர் வாகனங்கள் கைப்பற்றப்பட்டது, 3 சாரதிகள் கைது..!

யாழ்.கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற 4 டிப்பர் வாகனங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

மணல் வியாபாராத்திற்காக வெளியிடங்களில் இருந்து இந்த மணல் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்நிலையில் 4 டிப்பர் வாகனங்களையும் கைப்பற்றியுள்ள பொலிஸார் 3 சாரதிகளையும் கைது செய்திருக்கின்றனர்.

கைதான சாரதிகளை நீதிமன்றத்தில் முற்படுத்துவற்குரிய நடவடிக்கையை கோப்பாய் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews