அமைச்சுப் பதவிகள் குறித்து அறிக்கை கோரிய உயர்நீதிமன்றம்.

தற்போதைய நிலையில் இரத்துச்செய்யப்பட்டுள்ள அமைச்சுப் பதவிகள் தொடர்பில் ஆராய்ந்து இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சட்டமா அதிபருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தற்போதைய அமைச்சரவை நியமனம் சட்டவிரோதமானது என தீர்ப்பளித்து அதன் செயற்பாடுகளுக்கு தடைவிதிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவொன்று இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு நீதியரசர்கள் விஜித் மலல்கொட, யசந்த கோதாகொட மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

சில அமைச்சுப் பதவிகள் அண்மையில் நீக்கப்பட்டமை தொடர்பிலான அறிக்கையை சமர்ப்பிக்க கால அவகாசம் வழங்குமாறு சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் இந்திக தேவமுனி டி சில்வா நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதன்படி, குறித்த உத்தரவை பெற்றுக் கொடுத்த நீதியரசர்கள் குழாம், மனுவின் சமர்ப்பணங்களை உறுதிப்படுத்துவதற்காக எதிர்வரும் ஜனவரி மாதம் 27 ஆம் திகதி அழைக்க உத்தரவிட்டது.

Recommended For You

About the Author: Editor Elukainews