உயிரை கையில் பிடித்து பயணம் செய்யும் சந்தன மடு மக்களின் அவலம் .

மட்டக்களப்பு, செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சந்தன மடு ஆறு பகுதியில் இருக்கும் போக்குவரத்துக்கு பிரதானமான ஆற்றுப் பகுதியில் அதிகளவு நீர் செல்கின்ற காரணத்தினால் தங்களது உயிரை கையில் பிடித்து மக்கள் நீரில் கடந்து செல்கின்றனர்.

சுமார்  ஒரு நாளைக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள்  குறித்த ஆற்றை கடந்து தங்களது விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறுபட்ட அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்ற போதிலும் குறித்த சந்தன மடு ஆற்று பகுதி பல ஆண்டு காலமாக இவ்வாறே காணப்படுகின்றது.

வரட்சியான காலப்பகுதியில் மக்கள் மண்மேடு ஊடாக நடந்து பிரயாணம் செய்வதும், காலநிலை மாற்றம் ஏற்படும்போது அதிகளவான நீர் குறித்த ஆற்றுப் பகுதியில் நிரம்புவதனால் மிகவும் சிரமத்துக்கு மத்தியில் தங்களது விவசாய நடவடிக்கைகளிளும், போக்குவரத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.

குறித்த பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக மணல் அகழ்வு மேற் கொள்ள இருந்த நடவடிக்கை மக்களின் எதிர்ப்பு காரணமாக கைவிடப்பட்டிருந்தது.

இவ்வாறு இந்த மக்கள் அதிக நீர் பாய்கின்ற காரணத்தினால் தங்களது உயிரை கையில் பிடித்து ஈரளக் குளம் பகுதிக்குச் செல்கின்ற போதிலும் நேற்றைய தினம் கூட சரிதவியல் திணைக்களத்தினால் குறித்த ஆற்றுப்பகுதியில் மண் வளத்தை சுரண்டுவதற்கு வெளி மாவட்டத்தினை சேர்ந்த மண் உரிம உரிமையாளர்களுடன் வழங்கப்பட்ட அனுமதியை பரிசோதனை செய்வதற்காக குறித்த இடத்திற்கு வந்திருந்தனர்.

மக்கள் நாளாந்தம் துன்பப்பட்டு உயிர் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் பயணம் செய்கின்ற போதிலும் மண் மாபியாக்களின் அராஜக நடவடிக்கை தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றமை மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Gallery Gallery Gallery Gallery Gallery

Recommended For You

About the Author: Editor Elukainews