பெருந்தொகையான எறிகணைகள் மற்றும் வெடி பொருட்கள் மீட்பு.

கிளிநொச்சி உமையாள்புரம் சோலை நகர் பகுதியில் உள்ள வீடொன்றில்  இருந்து பெருந்தொகையான எறிகணைகள் மற்றும் வெடி பொருட்கள் விசேட அதிரடிப்படையினர் மற்றும் போலீசாரின் உதவியுடன் மீட்க்கப்பட்டுள்ளது
கிளிநொச்சி உமையாள்புரம் சோலை நகர்ப் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை   எறிகணை ஒன்றினை வீட்டுக்குள் வைத்து கிறைன்டரினல்   வெட்டியபோது குறித்த எறிகணை வெடித்ததில் 25 வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்ததுடன் 13 வயதுடைய சிறுவன் ஒருவனும் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்
இந்த நிலையில் ஏற்கனவே சம்பவம் இடம்பெற்ற  வீட்டில் ஒரு சில வெடி  பொருட்கள் அனை்றைய தினம்  அடையாளம் காணப்பட்டன தொடர்ந்து  விசேட அதிரடிப் படையினரும் போலீசாரும் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த வீட்டிலிருந்தும் வீட்டு வளவுக்குள் இருந்தும் பெருந்தொகையான வெடிபொருட்கள் நேற்று காலை மீட்கப்பட்டுள்ளன.

Recommended For You

About the Author: Editor Elukainews