ஒமிக்ரோனால் கட்டுப்பாடுகள் மீண்டும் விதிக்கப்படலாம்: ஜனாதிபதி.

மீள் உருவாக்கப்பட்ட ஆரியகுளம் மகிழ்வூட்டும் திடலானது சில பொது மக்களின் அலட்சிய செயற்பாடுகளால் மீண்டும் அருவருக்கத்தக்க இடமாக மாறி விடுமா என சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

புதிதாக அழகுறச் செய்யப்பட்டுள்ள ஆரியகுளம் மகிழ்வூட்டும் திடல் திறந்து சில நாட்களுக்குள்ளேயே அங்கு குப்பைகள் வீசப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

தினமும் நூற்றுக்கணக்கானோர் ஆரியகுளத்தை பார்வையிட வருவதால் அங்கு அதிக அளவில் சன நடமாட்டம் கூடுவதுடன் மைலோ பக்கெட்டுகள், தண்ணீர் போத்தல்கள் அங்காங்கே வீசப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விடயத்தில் பொது மக்கள் கரிசனை கொண்டு யாழ்ப்பாண மாநகர சபையினால் அங்கு வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டியில் குப்பைகளைப் போட வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews