யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணனுக்கும் ஜெர்மன் தூதருக்குமிடையில் இன்று முக்கிய சந்திப்பு……!

(நெல்லியடி நிருபர்)
யாழ்  மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன்  அவர்களுக்கும்  ஜேர்மன் நாட்டின் இலங்கைக்கான  தூதுவர் Holger seubrt க்கும் இடையிலான சந்திப்பொன்று யாழ் மாநகர சபை மண்டபத்தில் இன்று  இடம் பெற்றுள்ளது.
இச் சந்திப்பில்  தமிழ் மக்களின் நீண்ட கால கோரிக்கையான சமஷ்டி அடிப்படையான தீர்வை பெற்றுக்கொள்வதற்கும், தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட இன அழிப்பு உட்பட்ட அநீதிகளுக்கு
நீதியை பெற்று கொடுப்பதற்கும், ஜேர்மன் உள்ளிட்ட சர்வதேச சமூகம் உதவ வேண்டும் என்றும்
மனிதாபிமான மற்றும் மனித உரிமை சட்ட மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையை தாண்டி சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கோ அல்லது சிறப்பு தீர்ப்பாயம் ஒன்றிற்கோ  விடயங்களை பாரப்படுத்தப்பட வேண்டும் என்றும்,
 யுத்த அழிவிலிருந்து மீண்டுவரும் எமது பிராந்திய அபிவிருத்திக்கும் யேர்மன் உதவ வேண்டும் என்றும்  யாழ் மாநகர சபைக்கும் யேர்மனின் பிரதான நகரங்களுடன் இரட்டை நகர் உடன்படிக்கை ஒன்றை மேற்கொண்டு இணைந்து செயற்படுவதற்கும் உதவ வேண்டும் என்றும் முதல்வரால்  கோரிக்கைகள்  விடுக்கப்பட்டுள்ளன

Recommended For You

About the Author: Editor Elukainews